புரியாத உணர்வு
பிஞ்சுகள் இதழ்படாத தாய்முலைகள்
பசுமையிழந்த பட்டுபோன மரங்கள்
முறைப் பெண்ணை அடுத்த யுகமாவது -மணம்
முடித்து கொள்கிறேன் என உறவுகள்
இறந்த பிறகாவது நம்
இதயங்கள் இணையட்டும் என காதலர்கள்
நடந்ததை நினைத்ததால்
நேசிக்க முடியா நேரங்கள்
உயிர் எப்போது பிரியுமோ?
உறங்காத விழிகள்
எவன் விழிகள் வேர்த்தால் -நமக்கு
என்ன என கவலைபடா இராணுவர்கள்
வகுப்பறை செல்லும் வயதில்
கருவறையில் குழந்தை சுமந்தபடி
தமிழராய் பிறந்ததைத் தவிர
தவறு என்ன செய்தோம்
தவிப்போடும் ஆத்திரதோடும் அப்பாவிகள்
இத்தனை'கள்' விளங்காத
இலங்கை இராவணனுக்கு
எப்போது புரியும்
இந்த ஈழத்தமிழர்களின் உணர்வு?