தீண்டலாமா உன்னை

..."" தீண்டலாமா உன்னை ""...

இயற்கையின் அழகும்
இணைந்திருக்கும் விதமும்
விழிகளை மயக்கும்
விரசங்கள் விளக்கும்
சின்ன தேன் சிட்டு பூவில்
புதைந்த தேனுண்ண
சிட்டுக்குருவி லேகியமே
சிட்டாய் பறக்குது லோகிக்க
பூவுக்கு நோகாமல் பூப்போலே
தேன் சுவைக்க தன் சின்ன
சிறகினை விரித்தசைத்து
காற்றினை குளிர்வித்து
சுகத்தோடு உறங்கவைத்து
அலகால் அழகாய் தேவையை
சிதறாமல் எடுத்துக்கொண்ட
சிட்டுக்குருவியின் சின்ன
திருட்டுத்தனமாயில்லை
தீண்ட துடித்திடுமிந்த
பூக்களின் குணமா!!
கொடுத்து பெறுவதிலும்
கோடிகளாய் சுகங்களுண்டு
கொண்டை முளைத்த
குருவியாகினும் சரியே
கொண்டையில் சூடிடும்
வண்ண பூவாகினும் சரி,,,,,
தீண்டலாமா உன்னை

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (7-Aug-14, 2:47 am)
பார்வை : 307

மேலே