நடைப்பழகும் சூரியன்-5
பாதையில் பூக்கள் உண்டெனில் மகிழ்
வாதைமிகு ஊழல் ஈக்கள் மிதி
எங்கும் இந்தியா எவரும் இந்தியர்
தங்கி வாழ நடைப் பழகு
பாட்டுரைப் பாரதி மொழி ஊன்றி
ஏட்டில் பழகு அவன் நடை
பாரதிதாசன் நம் உறவு செந்தமிழ்
சாரதி சொற்படி நட நாளும்.
இமியேனும் இழிச்செயல் அற்ற நம்
தமிழன்பன் பாதை செல் . வாழ்.
குவியலாய் திசையெங்கும் மானுட விரல்கள்
புவி முழுதும் உறவுக்காய் நடைப்பழகு
விழும் விதையே விருட்சமாகும் -நீ
விழுந்தால் எழு வீறு கொண்டு..
மூடநம்பிக்கை பெண்ணடிமை தனியுடைமை -பாதையின்
மேடுகள் இவை தகர் .சமதளமாக்கு
எவரோடும் விரல் பிடித்து நடைப்பழகு
அவரெல்லாம் மானுடம் பெற்ற மனிதரெனின்