ரத்து - விவாகரத்து -- குமரிபையன்

இரவில் கனமழை பொழிகின்ற நேரம்
இலை நுனி உதிர்க்கின்ற துளி ஈரம்
குளிர் காற்று எனில் உரசுகிற ஓரம்
குதித்தோடும் நம் நினைவுகள் தூரம்

சில்லென்று என் மேனி சிலிர்கின்றதே
சிந்தித்தேன் என் பக்கம் நீ இல்லையென்று..!

நட்டு வைத்த உன் ரோஜா செடியில்
நாட்கடந்து மலர்ந்த ஒரு மலரில்
வட்டமிடும் வண்டுகளின் நடுவில்
நாட்டமுடன் நான் ஓட நின்றேன்

சில்லென்று என் மேனி சிலிர்கின்றதே
சிந்தித்தேன் என் பக்கம் நீ இல்லையென்று..!

கல்யாண நாளில் அலையடிக்க வந்தாய்
கனவெல்லாம் களிப்பாக்கி குதிக்க வைத்தாய்
முதல் பிரிவு ஈராண்டில் முடிவாக தந்தாய்
முடியாமல் முகம் காண சட்டென்று எழுந்தேன்

சில்லென்று என் மேனி சிலிர்கின்றதே
சிந்தித்தேன் என் பக்கம் நீ இல்லையென்று..!

மது போதை மறைத்ததே என் பாதை
உதைத்துனை அடித்த நானொரு பேதை
இனி தொடமாட்டேன் சத்தியமிது சீதை
உன் குரல் கேட்க திறந்தேனே காதை

சில்லென்று என் மேனி சிலிர்கின்றதே
சிந்தித்தேன் என் பக்கம் நீ இல்லையென்று..!

முழு நேரம் உன்வரவையே தேடி
முகாரி ராகங்கள் நான் இங்கு பாடி
வருவாயோ மீண்டும் மன்னித்து எனை நாடி
விவாகரத்தை ரத்துசெய்து உயிரே நீ ஓடி..!

---------------------------------------------------------------------------------------------------------
அவசர கோலத்தில் விவாகரத்து பெற்ற ஒரு இளைஞனின் புலம்பல்

எழுதியவர் : குமரி பையன் (7-Aug-14, 11:37 am)
பார்வை : 259

மேலே