இது உனக்குத்தான்

உடன்பிறப்பே உனர்ந்துகொள் . . . . !
---------------------------
அரசியலில் விளம்பரம் தேட முடியாத
சில ஆதி கால நிதி தலைவர்கள்
தன் வீட்டு அடுப்றையில்
நடக்கும் அக்கபோரினை
வெளிச்சம் போட்டு காட்டுவதும்
அண்ணன் தம்பி குடுமி பிடி போடுவதும்
அது கொட்டை எழுத்து செய்தியாவதும்
எந்தவகை விளம்பரம் ?
என்ன நாடகம்
எனக்கு தெரியவில்லை !
பகுத்தறிவு பேசிகொண்டு
மஞ்சள் துண்டை மாலையாக்குவதும்
தன் வீட்டு பெண்களை கொண்டு
யாகம் நடத்தி
யோகம் அடிக்க நினைப்பதும்
எந்த ஊர் உபதேசம் ?
தந்தை பெரியார்கள்
மணியான மனைவிகளை
ஆலய பிரவேசம் செய்ய அனுமதிதாரா ?
அது பற்றி யேதும் உண்டா
இங்கோ
கனிகளை துர்கை அம்மனுடன்
இறைவனை துதி பாட வைத்து விட்டு
தூரிகை யெடுத்து
தம்பிக்கு மடல் யெழுதும்
மடத்தனம் தேவையோ ?
உடன் பிறப்பே உனக்குதான்
உனர்ந்துகொள் !

எழுதியவர் : (10-Aug-14, 8:30 am)
Tanglish : ithu unakuththaan
பார்வை : 84

மேலே