நன்றிக் கடன்
நன்றி! என் எதிர்வீட்டுப் பெட்டைச்சேவலாய் இருந்ததற்கு!
நன்றி! நீ உன் அப்பனாக அன்றி உன் அம்மாவின் ஜாடையில் பிறந்ததற்கு!
நன்றி! ரக்ஷா பந்தனன்று என்னை தேடாததற்கு!
நன்றி! எந்தன் அறையின் ஜன்னல் நிலவாய் ஆனதற்கு!
நன்றி! என் முகக்கண்ணாடியில் அழகைக் காட்டியதற்கு!
நன்றி! என் சைக்கிள்-டயரில் காற்றில்லாமலும் றெக்கைக் கட்டித்தந்ததற்கு!
நன்றி! என்னை கல்லூரிக்கு தினமும் செல்ல வைத்ததற்கு - உன் கல்லூரிக்கு!
நன்றி! புத்தனைப் போல் மரத்தடியில் பொறுமைக் காக்க வைத்ததற்கு!
நன்றி! உன் திருமண அழைப்பிதழில் என் பெயரை அதிகாரமாய் மாப்பிள்ளை என்று சேர்த்ததற்கு!
நன்றி! 'அவர்' பெயரும் என் பெயர்தான் என்று எங்கள் வீட்டில் சொல்ல, எனக்காக ஒரு முறை வெட்கப் பட்டதற்கு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
