மொழியின் சிறப்பு

மதத்தின் வாழ்வே
மொழியில் தான்
மதத்தை நம்பி
மொழிகள் இல்லை
எம்மொழிப் பெயராய்
இருந்தாலும்
எம்மதப் பெயராய்
இருந்தாலும்
பலவித அர்த்தங்கள்
அதற்கிருக்கும்
ஓசைக்காக கடன்வாங்கி
பெயர்களைச் சூட்டும்
நிலையெதற்கு?
கலப்பட மொழியா
தமிழ் மொழியும்
பெயர்க்கு அலைந்து
திரிவதற்கு?
மதத்தைக் கடந்து
நிற்பது தான்
மனிதன் படைத்த
மொழிகள் எல்லாம்
தமிழராய் இருக்கும்
அனைவருமே
தாம்பெறும் அருந்தவப்
பிள்ளைகட்கு
தமிழ்ப்பெயர் சூட்டி
மகிழ்வதுவே
தமிழின் மாண்பைக்
காப்பதுவாம்.
(எனது பெயர் சங்க நூல்களைத் தேடியலைந்து (ஏட்டுச் சுவடிகள் அச்சேறக் காரணாமாயிருந்து ) நமக்கு அளித்த தமிழ்த் தாத்தா எனப்படும் அறிஞர் உ.வே.சா அவர்களின் பெயர் என்பதால் மாற்றம் காணவில்லை).