நீயே என் தாயாக வேண்டும்

உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்.....

தவழ்ந்தவன், தடுமாறி எழுந்தவன்,
அன்று நடை தடுமாறாமல் கை கொடுத்தாய் .
பின்பு தடை வாரா வாழ்வு தந்தாய் .
நீயே தாயே !

அன்று உங்கள் விரல்களே என் முதல்
நடை வண்டி..
பின்பு தான் கண்டேன் மர நடை வண்டி.
தந்தது தாயே நீயும் அப்பாவுமே .

எல்லாமும் தந்தீர் ,
என்னை ஆளாக்கினீர்.
என்னை உருவாக்கினீர் .
கரிசனமும் கண்டேன் .
கண்டிப்பும் கண்டேன் .
களிப்போடு நிற்கிறேன் .

தவறுகள் கண்ட போது
மறவாமல் கண்டித்தீர்கள் ,
தண்டித்தீர்கள் ,
கண்ட பலன் உயர்வான வாழ்வு.

அன்பு, பாசம் ,அடக்கம்,
ஆண்றோர் சொல் கேட்டல் ,
நற்சிந்தனை, நயமான பேச்சு ,
அத்தனையும் கண்டேன்.

பெற்றது ஒன்றல்ல ,
பெருமைகள் பல .
பெருமையோடு சொல்வேன்,
மறு பிறப்பிலும் நீயே என் தாயாக வேண்டும்.

(அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டிக்கான கவிதை )

எழுதியவர் : arsm1952 (10-Aug-14, 7:59 pm)
பார்வை : 145

மேலே