உன் மௌனம் போதுமடி
வெறுக்கும் பெண்ணே கொஞ்சம் நில்லு
நீ மறுக்கும் காரணம் மனதிடம் சொல்லு
காதல் என்றால் எதையும் பார்க்காதே
அனைத்தும் பார்த்தல் காதல் ஆகாதே
என் நடக்கும் மலரே
கவிதை அழகே
என் உயிரின் உருவே
காதல் மொழியே
உன் மௌனம் போதுமடி
உன் பதில் வேண்டுமடி
மறுக்கும் மனம் மட்டும்
உனக்கு மறக்க வேணுமடி