காத்திருப்பின் காயங்கள்

.."" காத்திருப்பின் காயங்கள் ""...
அலைகள் இல்லாத கடலைப்போல்
ஆசைகள் இல்லாத மனதைப்போல்
இலைகள் இல்லாத மரத்தைப்போல்
மேகம் இல்லாத வானத்தைப்போல்
நிலவு இல்லாத இரவினைப்போல்
கதிரவன் காணாத விடியலைப்போல்
சுகங்கள் இல்லாத இளமைபோல்
சுட்டெறிக்கும் சோக தனிமைப்போல்
தீண்டப்படாத பூக்களைப்போல்
தேவைகள் தீராத பணத்தப்போல்
வெளிச்சமில்லா இருட்டறைபோல்
தீபங்கள் இல்லாத கார்த்திகைபோல்
உணர்ச்சி இல்லாத சடத்தைப்போல்
தாகம் தீர்க்காத கண்ணீரைப்போல்
உயிர் பிரிந்திடாத உடலைப்போல்
மரணம் என்னை நெருங்காதவரை
உன்னை விட்டு விலகுவதில்லை
கவிதைகளோடே காத்திருந்தேன்
அந்த மரணமாகவே நீ என்னிடம்
வருவாயென்று அறியாமலேயே ,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....