களைத்துப் போய் காதல் தேடினேன் - இராஜ்குமார்

ஏமாற்றங்களுக்கு
எனை விற்று
ஏமாளியாக மாறிய
ஏழரையெனும் நொடியில்
வியந்துப் போன
விந்தையை - உன்
விழிகள் சொல்ல
புது புது அறிவை
எனது விரலே
எடுத்து எழுத
களைத்துப் போய்
காதல் தேடினேன் ..!
முகத்திற்கு முன்
கணினி கண் சிமிட்ட
மேசை அருகே - என்
மேனி நகர்ந்து ..
இதோ ..
ஏதோ ஒரு புத்தகத்தை
எடுத்துப் புரட்ட ..
முதல் பக்கத்தில்
முத்தமிட்டு
நடுப் பக்கத்தில்
நழுவாமல் நின்று
கடைசி பக்கத்தில்
காணாத வரியோடு
கண்ணை கடத்தி
இமைகளை இன்னும்
இழுத்து இழுத்து
இம்சை இல்லா
இன்பம் தருவதே
இதமான காதல் ..!!
-- இராஜ்குமார்