கோழை ஆனேன் உன் கொலுசின் குரலில் - இராஜ்குமார்

பளிங்காய் போனது
என் பார்வைக்கு
உன் பாதம் பட்ட - சென்னை
பள்ளிக்கரணை பகுதி ..!!

இல்லாத இன்பங்களுக்கு இடையில்
துன்பம் கூட துவர்த்தாலும் - உன்
நினைவை திரட்டி
நிம்மதி பெறுகிறேன் ..!!

உறக்கத்தின் உலறலை
உன் உதடு உரச
கன்னம் தொட்டு
காணாமல் போகிறது கனவு ..!!

மோதி கொண்ட கண்ணில்
மோகமில்லா காதல் சொன்ன
முகவரியை எழுதி எழுதி
முத்திரைப் பதியாத
கடிதம் கையோடு ..!!

தேடி வரும் பாதையில்
மரங்கள் எல்லாம்
மனிதாய் மாற
பார்வை தேடுது
பதுமை உன்னை ..!!

பெண்ணே ..
இப்ப புடிச்ச கிறுக்கு - இதுல
புதுசா ஏதோ இருக்கு ..!!

இதோ ..
படியில் ஓடி நீ மறைய
கோழை ஆனேன் - உன்
கொலுசின் குரலில் ..!!

--- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Aug-14, 4:14 am)
பார்வை : 2288

மேலே