குழந்தை

குழந்தைச செல்வம்
தேடற்கரிய சொத்து
கள்ளமற்ற வெள்ளை உள்ளம்
குழந்தை உடையது
அன்பின் வள்ளல்
குழந்தை என்போம்

அள்ளி அள்ளி அணைத்திட
ஆயிரம் உறவுகள்
பாசத்தின் கைகளுக்குள்
பக்குவமான ஸ்பரிசம்

பூவிலும் மென்மை பட்டு மேனி
கைபட்டால் சிவந்து விடும் அழகு
செவ்விதழின் சின்னஞ்ச் சிறு புன்னகை
விசும்பலுடன் விம்மி வரும் அழுகை
நம்மையே துடிக்க வைக்கும்
துவள வைக்கும்

தொட்டுவிட தொட்டுவிட துடிக்கும் நம் விரல்கள்
விரல் பட்டுவிட்டால் நொந்திடுமோ ./ அச்சம்
கண் பட்டுவிட்டால் நொந்திடுமே குழந்தை
அச்சத்துடன் நாமும் அக்கறையாய்
பாசத்துடன் பக்குவமாய்
கண்ணை இமை காப்பதுபோல்
காத்து வளர்த்திடுவோம்

பிள்ளையை பெற்று விட்டால் போதுமா
பேணித்தான் வளர்க்க வேண்டும்
ஈ எறும்பு அண்டாமல்
இரவு பகல் கண்விழித்து
இடைஞ்சல்கள் ஏதுமின்றி
நம் செல்வம் வளர்ந்திட
நம்மையே நன்மையாய் கொடுத்திடுவோம்

பண்புள்ள பிள்ளை என
பாரெங்கும் புகழ் பரவ
பாசம் என்னும் உறவுகளில்
செல்வமென சிறந்த்திடவே
பக்குவமாய் வளர்த்திடுவோம்

எழுதியவர் : பாத்திமா மலர் (13-Aug-14, 5:09 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 702

மேலே