சுதந்திரமே சுகம்தானா

சுதந்திரமே நீ சுகம்தானா
என் கேள்வி சரிதானா ....

கடந்து சென்ற காலங்களும்
நடந்து வந்த பாதைகளும்
கதை கதையாய் சொல்லும்
கஷ்டங்களும் காயங்களும் கொஞ்சம்மல்ல ...

புது யுகம் படைகின்றோம்
பூக்களை பறித்து விட்டு
முட்களை நட்டு வைத்து
நாளை நடக்க போவது நாம் என்று அறியாமலே ...(சகோதரத்துவம் )

ஆங்கிலேயர் வந்து அடிமைபடுத்தியது அன்று
ஆங்கே சென்று அடிமை படுவது இன்று
இந்த யுகம் தான் நாம் தேடு நவீன யுகம் ....(அயல்நாட்டு வேலை )

படிக்காத மேதைகளும்
படித்து படித்து சொன்னதை
நினைக்க மறுக்கின்றோம்
மறந்துதான் நிற்கின்றோம்....(கடமைகள்)

தாய் மொழியை மறந்துவிட்டோம்
துணை மொழியாய் தொட்டு கொள்கின்றோம்
நாளைய தலைமுறையும் சொல்லும்
தமிழும் ஒரு மொழியென்று ....(மொழிப்பற்று )

வேற்றுமையில் ஒற்றுமையா இல்லை
ஒற்றுமையில் வேற்றுமையா ???

வேற்றுமையை வெட்டிவிட்டு
ஒற்றுமையை ஒட்டிக்கொண்டு
ஒன்றுபடுவோம் என்றும் நாம் இந்தியர் ....

எழுதியவர் : வினோலியா எபினேசர் (13-Aug-14, 5:06 pm)
சேர்த்தது : vinoliya Ebinezer
பார்வை : 103

மேலே