உரிமைக்குரல்

பள்ளிக்கூடத்துல
புள்ளைய சேர்க்க
போனேங்கோ.
ஃபாரம்
ஒன்னு கொடுத்தாங்கோ!

ஊரு,பேரு
அப்பன் , ஆத்தா
ஒன்னொன்னா
கேட்டாங்கோ.
டான்டான்னு
சொன்னேங்கோ !!

விலாசம்,
வருமானம்,
விஜாரிச்சாங்கோ!
விவரமெல்லாம்
தந்தேங்கோ.

கடைசியா
ஜாதி இன்னா ?
மதம் இன்னா ??
சொல்லுன்னாங்கோ.

ரெண்டுத்துக்கும் ஒரே
-----
கோடா போட்டேங்கோ.

வாட்?னு தலையாட்டி
"புள்ளைங்களுக்கு
அரசாங்க சலுகைகள்
கிடைக்காது"
கத்தினாங்கோ.

சலுகைகள் வேணாம்
உரிமைகள் கொடுக்க
சொல்லுங்கன்னு
விருவிருன்னு
வந்துட்டேங்கோ.

எழுதியவர் : ராம்வசந்த் (13-Aug-14, 4:07 pm)
பார்வை : 144

மேலே