எழுதாத வார்த்தைகளின் சொந்தக்காரி 555

காதல்...
ஒரு எழுத்தாளன் கிடைக்கும்
வார்த்தைகளை எல்லாம்
கவிதையாக்கி...
கறபனையில்
சிந்தித்து எழுதும்...
காதல் கவிதைகள் பல...
காதலிக்கும் இளைஞன்
அவன் காதலியை நினைத்து...
வர்ணிக்கும் ஆயிரம் ஆயிரம்
வார்த்தைகள்...
பலரிடம் சேர்ந்து
விடுகிறது...
வர்ணிக்காத ஆயிரம்
ஆயிரம் வார்த்தைகள்...
அவன் நெஞ்சத்தில்
உள்ளது...
அவன் எழுதாத
வார்த்தைகள்...
அவள் ஒருத்தியிடம் மட்டுமே
சேர துடிக்கிறது...
சில வார்த்தைகள்
முத்தங்களாக...
சில வார்த்தைகள்
கண்ணீராக...
பல வார்த்தைகள்
அரவனைப்புகளுடன்
அவளை சேர துடிக்கிறது...
எழுதாத வார்த்தைகள்
அவளுக்கு மட்டுமே
சொந்தமாகிறது...
எப்போதும் காதலுடன்...
மௌனங்களின்
சொந்தக்காரி அவள்.....