வலியின் ஆழமும் நீயே

அழுது அடம்பிடித்த
நாட்களும் உண்டு !!
அழுவதாய் நடித்த
நாட்களும் உண்டு !!
ஏனோ அழுகையை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு
அழகிய நாட்களை
அழகாக திருடி சென்றாய்

ஓராயிரம் கதைகளில்
ஓயாத கற்பனையில்
ஒய்யாரமாய் வாழ்ந்தோம்
இன்று ஏனோ ??
உன் ஒற்றை வார்த்தையால்
"திசை திருப்பும் " முயற்சியா?

என் வாழ்வின் வசந்தம் நீயே
எனினும்
வலியின் ஆழமும் நீயே !!

எழுதியவர் : பாரதி வினய் (14-Aug-14, 5:15 pm)
பார்வை : 104

மேலே