விலைமகள்
தாயின் மகளாய் இருந்து
விலை மகளாய் மாறி
உடல் படும் வேதனையை விட
உள்ளம் படும் வேதனை
உறவுகள் சேர்ந்து
ஊர் கூடி ஒன்றாய்
திருமணம் நடத்த
நெற்றிச்சுட்டி - பிறை நிலா - நட்சத்திரம் சூடி
மல்லிகை கனகாம்பர பூக்கள் கூந்தலைச்சுற்றிட
காஞ்சி பட்டு உடுத்தி
கழுத்து பிடிக்க நகை பூட்டி
வைர மோதிரம் விரலில் ஜொலிக்க
கை நிறைய வளையல், கால் கொலுசு அணிந்து அலங்கரித்து
உறவு பெண்கள் கை பிடித்து மணவறை நடக்க
வேதங்கள் முழங்க
ஊரார் வாழ்த்த உறவுகள் அட்சதை தூவ
மங்கல நாண் கழுத்தில் ஏற
கையில் பால் சொம்பு ஏந்தி
தோழிகள் சூழ
முதலிரவு அறை சென்று
கணவன் கால் பணிந்து வெட்கமாய் அவர்
தோள் சாய்ந்து அவரோடு கூடி
அவர் உணவருந்த நான் மனமகிழ்ந்து
அவர் சாப்பிட்ட எச்சிலையில் நான் சாப்பிட ஆசை தான்
ஆனால்
தினம் தினம் திருமணமாய்
நித்தம் முதலிரவாய்
குப்பைத்தொட்டி எச்சி இலையாய் ஆகி
ஒரு தாயின் மகளாய் இருந்த நான் விலை மகளாய்