என் உயிரினும் மேலான விடுதலையே கவிஞர் இரா இரவி
என் உயிரினும் மேலான விடுதலையே!
கவிஞர் இரா. இரவி.
தொப்புள் கொடி உறவான ஈழத்து சகோதரர்கள் !
துய்க்க வேண்டும் விடுதலையின் சாரத்தை !
அடிமைப்பட்டு வாழும் வாழ்க்கை வாழ்க்கையன்று !
அடிமை விலங்கு அகற்றிய விடுதலை வாழ்வு நன்று !
சிங்களரின் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவோம் !
சிங்கத்தமிழரின் தனிக்கொடியை ஈழத்தில் ஏற்றுவோம் !
அய்நா மன்றத்தின் ஆதரவோடு உதயமானது !
அங்கே தெற்கு சூடான் என்ற தனி நாடு !
அய்நா மன்றத்தின் அங்கீகாரத்தோடு விரைவில் !
இலங்கையில் தனித்தமிழ்நாடு உதயமாக வேண்டும் !
போர்க்குற்றம் புரிந்திட்ட கொடூரன்கள் !
போர்க்கால அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும் !
இந்தியாவின் வெளிஉறவு கொள்கை மாற வேண்டும் !
இந்தியனாக தமிழக மீனவர்களை மதித்திட வேண்டும் !
தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க முடியவில்லை !
தமிழர்களை சுடும் இலங்கை இராணுவத்தைச் சுட வேண்டும் !
பாகிஸ்தானிடம் காட்டும் இராணுவ வீரத்தில் !
பாதியாவது சுண்டைக்காய் இலங்கையிடம் காட்ட வேண்டும் !
இங்கிலாந்துக்காரனிடம் நாம் பட்ட இன்னலை !
இலங்கையில் சிங்களனிடம் தமிழர்கள் படுகிறார்கள்!
பேச்சுவழக்கில் இல்லாது வழக்கொழிந்த !
பழைய சமஸ்கிருதத்திற்கு தரும் முன்னுரிமையை !
உலகளாவிய பன்னாட்டு மொழியான !
ஒப்பற்ற தமிழுக்கு தந்திட வேண்டும் !
ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசிகளை !
இறக்கிட முன்வர வேண்டும் !
இறங்கிய விலைவாசிகளை திரும்பவும் !
ஏறாமல் கட்டுப்படுத்திட வேண்டும் !
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டு !
கஷ்டப்படும் மீனவர் துயர்களை களைய வேண்டும் !
இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான
இனிய காப்பீட்டு கழகத்தை காத்திட வேண்டும் !
அந்நிய முதலீட்டை ஒருபோதும் !
ஆயுள்காப்பீட்டில் அனுமதிக்காதிருக்க வேண்டும் !
பெட்ரோல் டீசல் விலையை இறக்கிட வேண்டும் !
எரிவாயுவின் விலையைக் குறைத்திட வேண்டும் !
அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிட வேண்டும் !
அனைவருக்கும் சமமான வாழ்க்கை வேண்டும் !
இந்தியாவின் தேசிய மொழியாக தமிழாக வேண்டும் !
இந்தியர் அனைவரும் தமிழ் படித்து இன்புற வேண்டும் !
விடுதலை கேட்ட ஈழத்தமிழர்களை !
வேலியில் அடைத்தான் வேதனை தந்தான் !
மருத்துவமனை என்றும் பாராமல் இரக்கமின்றி !
மடையன் குண்டுகள் போட்டுத் தகர்த்தான் !
முதியவர்கள் குழந்தைகள் என்றும் பாராமல் !
மூர்க்கத்தனமாக கொன்று குவித்து மகிழ்ந்தான் !
வெள்ளைக் கொடி ஏந்திவந்த வீரர்களையும் !
வீதியில் விட்டு சுட்டுக் கொன்றான் !
கொலைகாரனை வரவேற்கும் மடமை மாற வேண்டும் !
கொலைகாரனை தண்டிக்கும் கடமை உணர வேண்டும் !
ஆடு பகை, குட்டி உறவு என்ற நிலைமை மாற வேண்டும் !
அற்புதத் தமிழர்களின் உணர்வை உணர வேண்டும் !
என் உயிரினும் மேலான தமிழ் வாழ வேண்டும் !
இந்த உலகின் முதல் மொழி தமிழ் அறிந்திட வேண்டும் !
ஊடகங்களின் தமிழ்க்கொலை தடுத்திட வேண்டும் !
உதடுகளில் தமிழ் மட்டுமே ஒலித்திட வேண்டும் !
தமிங்கில உரையாடலை உடன் ஒழித்திட வேண்டும் !
தமிழின் இனிமையை எல்லோரும் உணர்ந்திட வேண்டும் !
எல்லா வளங்களும் நிறைந்தது நம் தமிழ்மொழி !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிற மொழிகளில் !
கச்சத்தீவு இந்தியா போட்ட பிச்சை !
கச்சைக்கட்டி வந்து சுடுகிறான் தமிழரை !
ஏன் என்று கேட்க நாதியில்லை இந்திய இராணுவம் !
என்றுமே இலங்கையை திருப்பி சுடுவதில்லை !
தமிழ்நாட்டுத் தமிழருக்குப் பகைவன் சிங்களன் !
இந்திய நாட்டுக்கு சிங்களன் நண்பன் என்பது முரண் !
தமிழ்நாட்டு தமிழர்கள் தயவு வேண்டுமா?
இலங்கைநாட்டு சிங்களன் தயவு வேண்டுமா?
விரைவில் முடிவு செய்து அறிவியுங்கள் !
வேகமான முடிவில் உள்ளது உங்கள் ஆட்சி !
தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் !
தயவால்தான் மசோதாக்கள் மேல்சபையில் நிறைவேறும் !
இலங்கை சிங்களனுக்கு ஒரு வாக்கும் இல்லை !
இந்திய பாராளுமன்றத்தில் சிந்தித்து செயல்படுங்கள் !
வெளிஉறவு கொள்கைகளை மாற்றுங்கள் அல்லது !
வெளிஉறவு அமைச்சரையே மாற்றுங்கள் !
தமிழர்களை பகைத்துக் கொண்டு இனி யாரும் !
தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது !
என் உயிரினும் மேலான விடுதலையை !
என் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழன் பெற வேண்டும் !
என் உயிரினும் மேலான தமிழ்மொழி !
எங்கும் எதிலும் என்றாக வேண்டும்.!