சுதந்திரம்

மண்பிளந்து விதை வெளிவருகையில்
விதைக்கு சுதந்திரம்
பிள்ளை பேரு காலத்திலே
பெண்மையின் சுமைக்கு சுதந்திரம்
நீரடித்து சென்று கரையொதுங்கையில்
உயிர்க்கு சுதந்திரம்
கடலில் மூழ்கிய முத்துக்கு
எப்போதும் கிடைப்பதில்லை சுதந்திரம்
கவலை சூழ்ந்த மனித நிலையும் அதுபோல்
எதை தான் சுதந்திரம் என்பது
இன்றைய தந்திர உலகில் ...
மரமழித்து பறவைக்கெல்லாம்
சுதந்திரமென்று மனம் மகிழும் உலகே
ஏனோ எல்லோரும் மௌனமாய் ....

எழுதியவர் : கனகரத்தினம் (15-Aug-14, 1:07 am)
Tanglish : suthanthiram
பார்வை : 93

மேலே