மானுட முகவரி
வரிகள்
நூல்களின் வாசல்படி ...!
வீட்டு வாசல்படி
உனக்கு
முகவரி கொடுக்கும்
நூல்களின் வாசல்படி
உன் முகவரியை
உலகுக்கு கொடுக்கும் ....!
மலர்ந்த மலர்களில்
நாணம் இல்லை..
தேனீக்களின் விழிகளில்
காமம் இல்லை ...
போர்வைகள்
எதற்கு பூக்களுக்கு ....?
தொப்புள் கொடியில்
அறுந்த முகவரி
கல்லறையில் தானே காணாமல் போகிறது ...?
உணர்வுகள் சுமக்கும்
எண்ணங்கள் தானே
உன் உண்மை முகவரி ....!
நிரந்தரமில்லா
உலகத்துக்குள்
முகமூடிக்கு எதற்கு முகப்பூச்சு ...?
கல்லறையில்
முகவரியை பதிக்கும் முன்பே
செல்போனிலும் முக நூலிலும்
அழிக்கப்பட்டு விடுகிறது முகவரிகள் ....!
உணர்வுகள்
சுமக்கும்
நினைவுகள் தானே
நிரந்தர முகவரி ....?
))))))))))))))))))))))))((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))((((((((((((((((((((()))))))))))))