வாலிபத்தின் சிலந்தி வலை

என்
மனசு மாளிகையில்
உன் நினைவுகள்
கட்டிய
சிலந்தி வலைகள்.....!

உனக்குள் நானா
எனக்குள் நீயா ...?

உன்
நினைவுகளால்
சிக்கித்தவிக்கிறது
என் சிந்தனைகள் சிலந்தி வலையாய் ....!

வீட்டை
சுத்தம் செய்ய
துடைப்பத்தோடு அம்மா ....

என்னை
சுத்தம் செய்ய
நாக்கை முறமாக்கி
சலித்தெடுக்கும் அப்பா....

நான்கு சுவற்றுக்குள்
உன் நினைவு
சிலந்தி வலைக்குள்
சிறைப்பட்டு கிடக்கிறது இந்த வாலிபம் ....!

உன் விழிகளால்
நான்
வீழ்ந்த வரலாற்றை
திருத்தி எழுத
உன் இமை சிறகுகளால்
சிறகடி
மீண்டெழுந்து
காதல் வானில்
பறக்கட்டும் இந்த வாலிபம்....!

&&&&&&&&&&&&&&&&************&&&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : வெற்றிநாயகன் (15-Aug-14, 4:36 am)
சேர்த்தது : மு முருக பூபதி
பார்வை : 177

மேலே