ஆசை ஆசை

என்
முகம் பார்க்க
ஆசைப்பட்டுத்தானே
கருவறையிலிருந்து
என் மார்பறைக்கு குடி புகுந்தாய்...?
ஆசை தானே
பிரிவின் முதல்படி...!
முலைக்காம்புகளை
உன் உதடுகள் உரசிய
பரவசத்தில்
என் விழிகள்
மயங்கி கிடக்க
புட்டிப்பாலை
உன் உதடுகளில்
நெம்புகோலாக்கியது யார் ...?
பிரிவுக்கு வைத்த
முதல் ஆப்புத்தான் பால் பாட்டிலோ... ?
கர்ப்பபை
உள்ளும் உதைத்தாய்
கால்க்கட்டு
போடும் போதும் உதைத்தாய் ....!
காதலியே
மனைவியான பொழுது
அடைகாத்ததை
மறந்து
நிரந்தரமாக
அடைக்களமானாய் தாரத்தின் மடியில் ...!
தாய்க்கு
பின்
தாரம் தானே ...?
மனைவியின்
சிறைக்குள்
நீ
அடைபட்டு கிடந்தாலும் ...
நீ
குடியிருந்த
கர்ப்பபையின்
தொப்புள் கொடி வயிற்றை
அவ்வப்பொழுது
தடவித்தடவி மகிழ்கிறது இந்த தாய்மை .....!