சுதந்திர தாகம்

சுதந்திரத் தாயின் மடியில் தூங்கி
சுந்தர மொழிகள் சுகம்பெற வேண்டி
ஜாதி மதங்களை தளர்த் திடுவோம் !
ஜனத்திரள் பெருக்கை குறைத்திடுவோம் !

ஆதி அந்தம் நமக்கே சொந்தம்
நமக்குள் வேண்டாம் ஜாதி பேதம்
இந்தியரென்ற பெருமையோடு
சுந்தர மொழிகளை வளர்த்திடுவோம் !

குருதி சிந்திய சுதந்திரத் தியாகி
ஒவ்வொருவரும் நமது ஆதி
அண்ணல் காந்தியின் நல்வழி நின்னு
அறம் வளர்ப்போம் நாம் இங்கு !

ஆங்கிலன் அடிமை படுத்திய கொடுமை
அளந்துப் பார்த்தால் அளவே இல்லை;
கொடுமைக்கு பயந்து ஒளிந்திருந்தால்- இன்றும்
சுதந்திரம் என்பதே கேள்விக் குறிதான் ?

ஏற்றத் தாழ்வு மனப்பாண்மை
ஏனோ இன்னும் ஒழியவில்லை;
ஏழை என்பவன் கோழை இல்லை - அவன்
எதிர்த்து நின்றால் எஜமான் இல்லை;

வேற்று நாட்டின் நல்வரவு !
வேண்டும் நமக்கு நல்லுறவு !
நாட்டு நலன் என்றப் போர்வையில்
நாட்டின் உரிமையை பலியிடக்கூடாது !

பாடுப்பட்டுத் தேடிய விடுதலையை
பாங்குடன் காப்போம் பொக்கிஷமாய் !
பாருக்குள்ளே நல்ல பாரதம் என்ற
பாரதியின் சாரதியாய் நாமிருப்போம் !

எழுதியவர் : இரா.மணிமாறன் (15-Aug-14, 2:15 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : suthanthira thaagam
பார்வை : 169

மேலே