சுதந்திர தின சிறப்பு கவிதை

சுதந்திர தின சிறப்பு கவிதை!



வண்டிநிறைய பூவெடுத்து வண்ணமாலை நான்தொடுத்து
இன்டியாவே நான் உனக்கு சூடபோறேன்
பாட்டு ஒன்னு உன்ன பத்தி பாடபோறேன்

வீரத்தோடும் தீரத்தொடும் வெள்ளையனை ஈரத்தோடும் (அஹிம்சை)
வென்று பகைகொன்றவரை எண்ண வேண்டும்
அந்தநன்றியோடு நாம்அண்ணம் உண்ண வேண்டும.

தன்குருதி எண்ணையாலே தன் நரம்பை திரியாக்கி
தந்தார்கள் நமக்கெல்லாம் விடுதலை தீபம்.
தியாகிகளின் இன்னுயிரால் இன்னலெனும் இருள்விலகி
போனதனால் நம்நாடினி உலகை ஆளும்!

விரிகலையும் வளர்தொழிலும் வலுவாக நாம்வளர்த்து
வல்லரசாய் வளர்ந்துவிட்டோம் இன்று
வறுமைநிலை நாமொழித்து தன்னிறைவை அடைவதுதான்
உண்மையான சுதந்திரமாகும் இங்கு.

அரசியலில் சுதந்திரம் அன்றைக்கே அடைந்துவிட்டோம்
அதுவல்ல நாம்பெற்ற விடுதலை மனிதா
விலையில்லா கல்வியும் விவசாயம் எல்லாமே
ஏழைக்கு அரசாலே உருவாகும் நிலைதான்

சோசலிசம் வேண்டாம் கம்யுனிசம் வேண்டாம்
அணுஆயுதமும் நமக்கேண்டா தோழா
லஞ்சம்-ஊழல் இல்லாத வலிமைமிக்க பாரதமாய்
நல்லாட்சி நாம் அமைப்போம் நீ வாடா!

வந்தே மாதரம்!

எழுதியவர் : -அப்துல் வதூத் (15-Aug-14, 12:44 pm)
பார்வை : 429

மேலே