தள்ளாடும் தூண்கள்
'குடி தொற்று நோய்' பரவுது
குற்றங்களின் கரு அது ஆகுது
தமிழ்நாட்டு இளைஞனின் தலையெழுத்து மாறுது
உணர்வு மழுங்கடிப்பு நிகழுது
எழுச்சி இல்லா தலைமுறை தள்ளாடுது
'விஸ்கி,பீர்,ஜின்.' என ஏங்குது
நண்பன்டா கூட்டம் கூடுது
விடலை நா குளறுது........
கல்யாணம்,கருமாதி,காது குத்து
டாஸ்மாக் பக்கம் ஒதுங்குது
அப்பன்,புள்ள சேர்ந்தடிச்சா
குடும்ப ஒற்றுமை ஓங்குது
'சமத்துவ மையம் ' ஒன்று உண்டாகுது -அது
பாரில் மட்டும் என்றாகுது
மதிப்பு ,மரியாதை போயாச்சி
மானம்,வெட்கம் அடமானம் ஆச்சி
அடிதடி சண்ட குடும்ப சூழல் ஆச்சி.............
கல்லீரல் வெந்து கல்மனமும் உண்டாச்சி
மூளை நரம்பெல்லாம் சொன்னது கேட்காது.....
உணர்ச்சி இல்லாம போச்சி
கை நடுக்கம் உண்டாச்சி
கடை பக்கம் கால் போகுது........................
வெட்கம் கெட்ட அரசாங்கம்
வேடிக்கை பார்க்குது
ஆல்ஹகால் காசாக்கி
அன்னம் பிச்சை போடுது................
மூலைக்கு மூலை போதை கடை விரிக்குது
பசிக்கு விஷம் கொடுக்கும் ,பைத்திய தாய் ' ஆகுது
இது அறிவுடைமை ஆகுமோ?
கொலை,கொள்ளை,கற்பழிப்பு ,விபத்து எல்லாம்
மதுவாலே .......................
வேருக்கு நீர்பாய்ச்சி விழுதை வெட்டி பலன் என்ன?
நரம்பு தளர்ச்சியாம் நம் நாளைய தலைவனுக்கு
ஆண்மை குறைவும் வரும் அடுத்த தலைமுறை
இல்லாமல் போகும்
பெண்ணே கேள்..........
தந்தை,தலைவன் ,சகோதரன் யார் என்றாலும்
குடிப்பான் எனில் ஓங்கி அடி
சமூகம் ஓங்கும்...................