போக்குவரத்து விதி மீறல் தமிழகத்திலும், பிரிட்டனிலும் ஓர் ஒப்பீடு - 2

சூழல் 7:

நான் இங்கு வந்து சேர்ந்த நான்கு நாட்களுக்குப் பின் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை
(03.08.14) காலை 10 மணிக்கு மேல் வெயிலும் குளிரும் இல்லாத பொழுது நடந்து
சென்று பாதையோரத்தில் உள்ள பெஞ்சில் அமார்ந்திருந்தேன். அங்கிருந்து
முறையாகப் போக்குவரத்து செல்வதையும், வானில் நிமிடத்திற்கு ஒருமுறை
வந்திறங்கும் விமானத்தையும் பார்த்து வியந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது என்னருகில் ஒருவர் தற்செயலாக வந்தமர்ந்தார். கையில் சிறிய பீர்
கேன் வைத்திருந்தார். என்னை விசாரித்த பொழுது நான் இந்தியாவிலிருந்து
வருகிறேன் என்றும், மதுரை என்றும் சொன்னேன். அவர் சென்னையைச் சேர்ந்தவர்
என்றும், ஹௌன்ஸ்லோ civic enforcement officer என்றும் சொன்னார். அவர் பத்து
வருடங்களாக இந்தப் பணியில் இருப்பதாகவும் civic enforcement ல் தவறு செய்பவர்கள்
மூலமாக பிரிட்டிஷ் அரசுக்கு நிறைய சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.

என்னையும் உபசரித்தார். நான் உடனே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர் போன் நம்பரைக் கொடுத்து தேவையானால் தொடர்பு கொள்ளும்படியும்
சொன்னார். அன்று வீட்டுக்கு வந்து விட்டேன்.

சூழல் 8:

அடுத்த நாள் திங்கட்கிழமை (04.08.14) காலை 10 மணிக்கு மீண்டும் வழக்கமாக
உட்காரும் இடத்திற்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்திற்கு அருகில் சென்று
கொண்டிருந்தேன். எதிரே யூனிபார்மில் வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன்.
அவர்தான் நேற்று நான் பார்த்த நண்பர். கடமையாற்றச் சென்று கொண்டிருந்தார்.

தனக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக
நிறுத்தப்பட்ட வண்டிகளின் எண்களை கையில் உள்ள கருவியில் குறித்துக்
கொண்டிருந்தார். penalty notice வீடு தேடி வரும்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-14, 2:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 128

மேலே