சீராசிரியர் களிமண் தோப்பையா - ஓரங்க நாடகம்

சீராசிரியர் களிமண் தோப்பையா
ஓரங்க நாடகம்
(இந்த ஓரங்க நாடகம் 2012-ல் எழுதப்பட்டது. இதில் குறிப்பிடப்படும் யாரையுமே குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் புகழுக்கு ஆரம் சூட்டும் வகையில் தான் அமைந்துள்ளது. தவறான தகவல் இருப்பதாய் இருப்பின் விலக்கி கொள்வேன்)
***************************
ஜனவரி 14 2032
***************************
அறிவிப்பாளர்: ***இது உங்கள் கண் டிவியின் பொங்கல் நன்னாள் கொண்டாட்டத்தின் நேர்காணல்
நேரலை நிகழ்ச்சி. உலக தொலைக் காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத பொங்கல் நன்னாள் சிறப்பு நேரலை நேர்காணல். பங்கு பெறுவோர் சிராய்ப்பு பட்டிமன்றத்தின் தந்தை சீராசிரியர் மந்தைவெளி மாலைகண் கல்லூரியின் புவியியல் பேராசிரியர் முனைவர் சீராசிரியர் களிமண் தோப்பையா அவர்கள். பேட்டி காண்பவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் அடிச்சபுலி கஞ்சா நெருப்பு அவர்களின் பேரர் தண்ணி குடிச்சாக் கவிஞர் இளிச்சவாயர் அவர்கள்.
******
இளிச்சவாயர்:***** வணக்கம் அய்யா. உங்களை உங்கள் கண் டிவியின் நேரலை நேர்காணல் நிகழ்ச்சிகாக பேட்டி காணறத கண்குழுமம் பெருமையா நெனைக்குதய்யா.
********
சீராசிரியர் களிமண் தோப்பயா: ***** வண்க்கம் வண்க்கம் வண்க்கம்
******
இ. வா: ****அய்யா நா வணக்க்ம்னு ஒருதடவ தான் சொன்னென். ஆனா நீங்க வணக்கம்ன்ற சொல்லையே வித்தியாசமா உச்சரிக்கிறதோட அதே சொல்லை மூணு தடவ சொன்னீங்க. அதுக்கு என்னங்கய்யா காரணம்?
*******
சீ. க. தோ:***** நா ஒரு தடவ சொன்னா மூணுதடவ சொன்ன மாதிரி. இருந்தாலும் மூணு தடவ அதச் சொல்றது என்னோட வழக்கம். நல்ல தமிழ்ல பேசினா யாருய்யா மதிக்கறான். தப்புத் தப்பா உச்சரிக்கணுமய்யா. அதுதான் காலத்துக்கு ஏத்த கோலம். வேற மொழிலெ இருக்கற சொல்லயெல்லாங் கலந்து பேசினாத்தாய்யா மதிப்பு மரியாதை. இது 2032 ஆம் வருஷம் நடப்பு. இருபது வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2012 ஆம் வருஷம் நம்ம கவிஞர் தனிஷ் எழுதின Why this கொலவெறிங்கற ஒரே பாட்ல உலகப் புகழ் கெடச்சிருச்சு அவருக்கு. உலகம் முழுக்க இன்னும் அந்தப் பாட்ட கோடிக்கணக்கான பேர் ரசிக்கறாங்க. கம்பனக்கூட வெளிநாட்டுக்காரங்ளுக்குத் தெரியாது. நம்ம சூப்பர் ஸ்டார் தனுஷ்ன் புகழ் ஜப்பான் நாட்லெ எல்லாம் கொடி கட்டிப்பறக்குதய்யா. அவரு தான் எழுதின முதல் பாட்லேயே உலகப்புகழ் வாங்கிட்டாரு. அதுக்கு என்னய்யா காரணம்?
***********
இ. வா: தெரிலீங்கய்யா.****
சீ. க. தோ:**** என்னய்யா இதுகூடத் தெரியாம ங்கொய்யா நொய்யான்னூட்டு என்ன நேரலைப் பேட்டிவேற காண வந்துட்டீங்க.
***********
இ. வா: *****அய்யா அதுக்குப் பதில் எனக்குத் தெரியும் ஆனா தெரியாதுங்கய்யா. ஏனா உங்க வாய்லெ இருந்து வர்ற பதில நம்ம கண் டிவி நேயர்கள் எதிர்பாக்கறாங்கய்யா.
***************
சீ. க. தோ: *****சரி. நாஞ் சொல்றேங் ஒங்க மரமண்டைல ஒரைக்கற மாதிரி. அய்யா கவிஞர் தனுஷ் எழுதன மொதப் பாட்லெயெ கம்பனும் எந்தக் கொம்பனும் கனவ்லெகூட நெருங்கமுடியாத எடத்தப் பிடிச்சிட்டாரு. அதுக்குக் காரணம் அவுரு அந்தப் பாட்ட தூய தமிழ்லெ எழுதல்ல. கலப்படமா இங்லீஷ் வார்த்தைகளயும் தமிழ் வார்த்தைகளயும் கலந்து ஒரு புது மொழிலே எழுதினாரு. உண்மையான புதுக்கவிஞரய்யா அவுரு. என்ன ஆச்சு அதுக்கப்பறம் வெளியான எந்தப் பாட்டும் ஹிட்டான சாங் லிஸ்ட்லெ சேரவெ இல்லய்யா. இப்பப் புரிஞ்சுதா நா ஏங் வண்க்கம் வண்க்கம் வண்க்கம்னு மூணு தடவ சொன்னேன்னு.
***********
இ. வா: ******நீங்க சொல்றது உண்மதாய்யா. அய்யா அடுத்த கேள்வி.
*********
சீ. க. தோ:***** கேளுங்கய்யா. அதுக்குத் தானெ இங்க வந்திருக்கேன். எஸ் யூ கேன் புரசீட்.
***********
இ. வா: *****அய்யா நம்ம ஜனங்க சினிமாவைப் பத்தியும் நடிகர்களப் பத்தியும் பிஎச்.டி வாங்கற அளவுக்கு நெறைய விசயங்களத் தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஆனா உங்களப் போல உள்ள உலகறிஞ்ச பிரபலமான பேராசிரியர்களப் பத்தி நெறைய ஜனங்க ஒன்னுமே தெரியாம இருக்காங்க. இது நேரலை நிகழ்ச்சி. கோடிக்காண மக்கள் இந்த நிக்ழ்ச்சியப் பாத்திட்டு இருக்காங்க. அதனால உங்களப் பத்தி நீங்க வாங்ன பட்டங்கள் சாதனைகள் இதையெல்லாம்பத்தி வெளக்கமா சொல்லுங்கய்யா. .
***********
சீ. க. தோ: *****சரியய்யா கவிஞர் இளிச்சவாய. நா. பொறந்தது திருநெல்வேலி மாவட்டத்த்லெ உள்ள தீவட்டி பள்ளம்ன்ற சின்ன கிராமத்லெ. செழிப்பான களிமண் பூமி. அங்க எங்க்ளுக்கு பரம்பரையா பெரிய அளவிலெ செழிப்பான தோப்பு தொரவு எல்லாம் இருக்கும் அந்த களிமண் பூமியிலெ தென்ன வாழ கரும்பு, மஞ்சள் பலவிதமான காய்கறிகள எல்லாம் பயிரிட்டு வசதியா இன்னும் வாழ்ந்திட்டு இருக்கிற ஜமீன் பரம்பர நாங்க. களிமண்ணுங்கறது எங்க குடும்பப் பேருய்யா. எங்க குடும்பத்தச் சேர்ந்த ஒவ்வொருத்தர் பேருக்கு முன்னாடியும் களிமண்ணுனு போட்டுக்கற மண்ணின் மைந்தர்களய்யா நாங்க.
***********
இ. வா: *****அய்யா நீங்க பொறந்த ஊரு களிமண்ணுமேலே நீங்க வச்சிருக்கிற பற்றையும் பாசத்தையும் நெனச்சா எனக்குப் புல்லரிக்குதங்கய்யா.
***********
சீ. க. தோ:***** உமக்கு ஏய்யா புல்லு செல்லு எல்லாம் அரிக்குது. களிமண்ணப் பொன்னா மதிக்கறவறங்கய்யா நாங்க. களிமண்ணப் பத்தி ஆராச்சி பண்ணி அமெரிக்கவிலெ இருக்கிற யேல் யுனிவர்சிட்டிலெ டாக்டர் பட்டம் வாங்கனவய்யா நா.
************
இ. வா: *****அய்யா பள்ளி ஆசிரியருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது தர்றாங்க. உங்க பேருக்கு முன்னாடி சீராசிர்யர்ன்னு போட்டுக்கிறீங்க. சீராசிரியர்ன்றது பலபேர்க்கு புரியாத புதிரா இருக்கு. அதப் பத்தி கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்கய்யா.
************
சீ. க. தோ: ****அய்யா கவிஞர் இளிச்சவாயரே, போன வருஷத்திலெ அதாவது 2031-லிருந்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களில் இருந்து இந்திய அளவுள ஒருத்தரத் தேர்ந்தெடுத்து சீராசிரியர்ன்னு விருது கொடுக்கறாங்க. அந்த மொதல் விருதை எனக்கு குடுத்தாங்கய்யா. சீராசிரியர்ன்னா சீர்மிகு பேராசிரியர்ன்னு அர்த்தமய்யா.
***********
இ. வா: ****அய்யா முதல் சீராசிரியர் விருது பெற்ற பேராசிரியரய்யா கண் தொலைக் காட்சிக் குழுமத்தின் சார்பிலெ எனது வாழ்த்துக்களத் தெரிவிச்சுறென். அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நடத்திய பட்டிமன்றத்தைச் சிலர் சிரிப்பு பட்டிமன்றம்ன்னு சொல்லுவாங்க. அது எல்லாருக்கும் தெரிந்த விசயந்தாம். நீங்க நடத்தறது சிராய்ப்புப் பட்டிமன்றம். அப்படின்னா என்ன்ங்கய்யா அர்த்தம்.
*************
சீ. க. தோ: ******அவுரு பேராசிரியரு சாலமன் பாப்பையா நா சீராசிரியர் களிமண் தோப்பையா. அவுரு நடத்தினது சிரிப்பு பட்டிமன்றம்; நா நடத்தறது சிராய்ப்புப் பட்டிமன்றம். சிராய்ப்பு பட்டிமன்றத்துக்கு தலைமை ரசிகர் மன்றம் ஆலிவுட்லெ இருக்கய்யா. அய்யா கவிஞர் இளிச்சவாயரே, ஒங்க கையக் கொஞ்சம் நீட்டுங்க. (இளிச்சவாயர் கையை நீட்டுகிறார். சீராசிரியர் நறநறவென்று பற்களைக் கடித்துக் கொண்டு தனது நீண்டு வளர்ந்த நகங்களால் இளிச்சவாயரின் கைகளில் பூரி விடுகிறார்).
***********
இ. வா: ****ஆ….அய்ய்யோ …என்னங்கய்யா என் கையில நீளமா வரிவரியா கோடு போட்ட மாதிரி காயம் பண்ணீட்டீங்க.
*************
சீ. க. தோ: ****ஓஹ்ஹோ அப்ப ரத்தம் வருதா பாருங்க.
**************
இ. வா: ****ஆமாங்கய்யா லேசா ரத்தம் கசிதுங்கய்யா.
*************
சீ. க. தோ: **** இதுதாய்யா சிராய்ப்பு. காரசாரமா கைகல்ப்போட சிராய்ப்போட இருக்கறதாலத் தான் தமிழே தெரியாத பலகோடி வெளிநாட்டுக்காரன்கெல்லாம் என்னோட ரசிகரா இருக்காங்கய்யா. ஏய்யா பேராசிரியர் பாப்பையா காலத்துப் பட்டிமன்றம் மாதிரி ஆஹா அப்படி போடு அருவாளை இப்பிடி கொடுவாளைன்னு சொல்லிகிட்டு இருந்தா பட்டிமன்றத்தை இந்த 2032 ஆம் வருஷம் யாருய்யா ரசிப்பாங்க. WWE தொலக்காட்சி நடத்தற World Wrestling Entertainmentலே கன்னபின்னான்னு குத்திக்குவாங்க, அடிச்சிக்குவாங்க. அதுக்குப் பாருங்க உலகம் பூரா எவ்வளவு ரசிகருங்க இருகாக்காங்க. இது வன்முறையை ரசிக்கிற காலமய்யா.
*************
;இ. வா: *****அப்ப ஒங்க பட்டிமன்றத்லெ லேசான வன்முறை இருக்குதுன்னு ஒத்துக்கிறீங்களா?
*********
சீ. க, தோ: ******அது தாய்யா உண்ம. எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உல்கம் முழுக்க இருக்காங்கய்யா. சிராய்ப்பு பட்டிமன்றத்திலெ முரட்டுத் தனமான உணர்ச்சியும் அறிவுப்பூர்வமான செய்திகளும் 50 (fifty fifty) – 50ன்னு சொல்ற மாதிரி இருக்கும். இந்தக் காலத்திலெ அறிவு மாத்ரம் இருந்தா போதாதய்யா. வன்முறைய எதிர்கொள்ளும் தெறமயும் இருக்கணும். அதத்தாய்யா என்னுடைய சிராய்புப் பட்டிமன்றம் மூலம் இந்த உலக் மக்களுக்குக் கத்துக்கொடுக்கறென். இப்ப புரிஞ்சுதா உலகம் பூரா ஏன் எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கறாங்கன்றதுக்கான ரகசிய்ம்.
சிராய்ப்பு படிமன்றம் ஒரு உன்னதமான அறிவுப்பூர்வமான ராஜதந்திரக் கலைய்யா. கலைக்கு மொழி கெடையாது. சினிமாவுலெ பாருங்க எவ்வளவு எறக்குமதி நடக்கது. மொழிக் கலவை இயற்கையானதய்யா. மொழி தெரியாதவங்கள நடிக்க வைக்கறாங்க. பாட்டுப் பாட வைக்கறாங்க. “திருக்கோயிலெ ஓடி வா”ன்னு பாடினா எவன்யா ரசிப்பான், ”தெருக்கோயிலெ ஓடி வா”ன்னு பாடினதாலத்தான் அந்தப் பாட்டு ஹிட ஆச்சு. “காதல் பிசாசு……….பர்வாயில்ல”ன்னு தமிழ் தெரியாத ஒரு பாடகர் பாடினதை நம்ம தமிழ் ரசிகர் நல்லா ரச்சிசாங்கய்யா. பிள்ளைகளுக்கெல்லாம் இப்ப யாரும் தமிழ் பேர வைக்கிறதில்ல. இத பாத்து நாமெல்லாம் திருந்துணும்.சரி அய்யா கவிஞர் இளிச்சவாய்ரே உமக்கு சென்னைத் தமிழைப் பிடிக்குமா?
************
இ.வா: *****அய்யா நீங்க என்ன மன்னிகணும். நா கொங்கு நாட்டச் சேர்ந்தவன். கொங்கு தமிழ்ல் மரியாதை அதிகம் இருக்கும். சென்னைத் தழிழில் கெட்ட வார்த்தைகள் நெறைய இருக்குதுங்கய்யா. கஸ்மாலம், ப்யம், இன்னா, ங்கொய்யாலா. போங்கய்யா சென்னைத் தமிழப் பேசறது கெட்ட வார்த்த பேசறதுக்கு சமம்.
சீ. க். தோ. : ******** என்னய்யா நீர் க்விஞரா இருந்தும் மொழியில் உள்ள வட்டார வழக்குன்னு ஒண்ணு இருக்கறதையே மறந்தீட்டீர், உதாரணத்துக்கு.ஒண்ணு சொல்றங் கேட்டுக்குங்க இளிச்சவாயரே.’ அழைத்துக் கொண்டு’ன்னு சொல்ல நாம் எவ்வள்வு சிரமப்படறம். புதுச்சேரிலெ அத ’இட்டுக்குணு’ன்னு சொல்றாங்க. சென்னையிலெ ‘இஸ்துக்குணு’ன்னு சொல்றாங்க. இதுலெ எது பெஸ்ட்?
இ. வா.: ************* அய்யா நீங்களே சொல்லுங்கய்யா.
சீ. க. தோ.: ****** சரி நாஞ் சொறேன். ‘அழைத்துக் கொண்டு’ன்றது சுமார். ‘இட்டுக்கிணு’ பெட்டர். ’இஸ்துக்கிணு’தான் பெஸ்ட். ஆம்பள்ங்க தோள்ல துண்டப் போட்டாங்க. இப்ப படிக்கிற பொண்ணுக கூட ஒருபக்க தோள்ல த்ப்பட்டாவை நீளமா துண்டு மாதிரி தொங்கவிட்டுக்கறாங்க. மாராப்பு போட நெறைய படிச்ச பொம்பளங்க விரும்பறத்தில்லை . இது தாய்யா ஸ்டைலு. உமக்கெல்லாம் ரசனையே கெடயாதய்யா?
இ. வா.: ***அய்யா உங்க குடும்பப் பேரைப்பத்தி சொன்னீங்க. உங்க பேரு தோப்பையான்னு இருக்கு, அது காரணப் பெயரா இடுகுறிப் பெயரா?
**************
சீ. க, தோ: ***** எங்க கொள்ளுத் தாத்தா பேரு தோப்பையா. அவுரு எங்க தென்னந்தோப்லெ பொறந்தாராம். அதனால அவுருக்குத் தோப்பையான்னு பேரு வச்சாங்களாம். அதே போல எங்க அம்மா நிறைமாதக் கர்ப்பிணியா இருந்த சமயம் எங்க தென்னந்தோப்பு வீட்லெ இருந்தப்ப பிரசவ வலி வந்துச்சாம். மருத்துவச்சியை தோப்புக்கு வரவழச்சு பிரசவம் பாத்தாங்களாம். நா பொறந்தனாம். அதனாலெ எனக்கும் தோப்பய்யான்னு பேரு வச்சிட்டாங்க.
***************
இ. வா: *****அய்யா இறுதியா உங்க சிறப்புகளப் பத்தி சொல்லுங்கய்யா.
**************
சீ. க. தோ: **** அய்யா இளிச்சவாயரே. நா புவியியல் பேராசிரியரா இருந்தாலும் எங்க களிமண் பூமியைப் பத்தி நெறய கதை கட்டுரை நாவல் கவிதங்கெல்லாம் எழுதிட்டிருக்கேன். கரிசல் மண்ணைப்பத்தி எழுதின கி. ராஜநாராயணனுக்கு சாகித்ய அகாடமி விருது குடுத்த மாதிரி களிமண்ணப் பத்தி எழுதிட்டுவர்ற எனக்கு சாகித்ய அகாடமி விருதையும் மிஞ்சக்கூடிய வகையில் ஞானபீட விருதே கொடுத்திருக்கங்கய்யா,
நோபல் பரிசுக்குழுத் தகவல்படி இந்த வருசம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு எனக்குத் தரப்போறாங்களாம். இத கோடிக்கணக்கான உங்க கண் டிவி நேயர்களுக்கும் எனது உயினும் மேலான சிராய்ப்புப் பட்டிமன்ற ரசிகப் பெருமக்களுக்கும் தெரிவிச்சுக்றேன்.
*************
இ. வா : ****நல்லதுங்கய்யா.
*************
சீ. க. தோ: ****அய்யா கவிஞர் இளிச்சவாயரே நா உங்கள சில கேள்விங்க கேக்கப் போறேன், ஆர்வக்கோளாறு தான்.
************
இ. வா: ******நல்லதுங்கய்யா, கேளுங்க.
*************
சீ. க. தோ: **** நீங்க ஏய்யா தண்ணி குடிச்சா கவிஞர் இளிச்சவாயர்னு பேரு வச்சிட்டீங்க.
************
இ. வா.: *****அய்யா எங்க கொள்ளுத் தாத்தா ஆனைமலை பாராயண கவி. என் ரத்தத்லெ எப்பவும் கவிப்புனலே பெருக்கெடுத்து ஓடுதுங்கய்யா. எங்க பரம்பரைல யாருக்கும் மது அருந்தற பழக்கம் கெடையாதுங்கய்யா. நா ஒரு கிளாஸ் தண்ணி அதாவது குடிநீர் குடிச்சாக்கூட ஒடனே என்னுள் கவிதை பெருக்கெடுத்து ஓடும்.
”தண்ணி குடிச்சா கவிஞர்”ன்ற பட்டத்தை உலககக் கவிஞர் பேவை எனக்குக் கொடுத்தாங்க. தமிழ்லெ நகைச்சுவை கவிதைகளே ஏறக்குறைய இல்லன்னு சொல்லாம். நா அதுல சிறப்பு கவனம் செலுத்திட்டு வர்றேன், எம் பேரக் கேட்டாலே வாசகர்களுக்குச் சிரிப்பு வர்ணும். முத்தையா கண்ணதாசன் ஆன மாதிரி தன்னாசிமுத்துவா இருந்த நா இளிச்சவாயர் ஆனேன்.
***********
சீ. க. தோ.: ***** சரி ஒங்க தாத்த்தாவ ஏங் அடிச்சபுலி கஞ்சா நெருப்புன்னு சொல்றாங்க.
************
இ. வா.: ********* அய்யா எங்க சொந்த ஊரு ஒரு மலையடிவார கிராமம். எங்க தாத்தா சின்னப் பையனா இருந்த காலத்லெயே மலை அடிவாரப் பகுதிலெ சில சமூக விரோதிங்க கஞ்சாச் செடியைப் பயிரிட்டு கடத்தல் வேல பண்ணீட்டிருந்தாங்களாம். அறியாப் பருவத்திலெயே காந்தியக் கொள்கைலெ ஈடுபாடு கொண்டிருந்த எங்க தாத்தா அடிபட்ட புலி பாஞ்சு பாஞ்சு தாக்கற மாதிரி கஞ்சாச் செடிக்கெல்லாம் ஆவேசமா நெருப்பு வச்சுக் கொளுத்திட்டு அந்த சமூக விரோதிகள போலீஸ்லெ பிடிச்சுக் குடுத்தாராம். அப்ப அவருக்கு வயசு எட்டு தானாம்.
அது நடந்தது 1952 ஆம் வருசம். அந்த வருசம் வீர தீர்ச் செயல் புரிஞ்ச சிறுவர் சிறுமிகளுக்கான ஜனாதிபதி விருத எங்க தாத்தாவுக்குக் குடுத்தங்களாம். அந்த விருத அப்ப ஜனாதிபதியா இருந்தா டாக்டர் பாபு ராஜேந்திர பிராசத் எங்க தாத்தாவுக்கு குடுத்துப் பாராட்டினாராம். அதுல இருந்து எங்க தாத்த அமாவாசை அடிச்ச புலி கஞ்சா நெருப்பு ஆயிட்டாராம்,
*************
சீ. க. தோ. : ****** இந்தத் தகலயெல்லாம் உங்க கண் டிவியின் வழியா உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான நேயர்களுக்கும் என் உயிரினும் மேலான கோடிக்கணக்கான சிராய்ப்புப் பட்டிமன்ற ரசிகப் பெருமக்களுக்கும் தெரிவிச்சு அவர்கள் சார்பல என்னோட நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். நன்றி. வண்க்கம்.
***********
இ. வா: ************ஒங்க நேரத்த நம்ம கண் டிவி நேயர்களுக்காக ஒதுக்கித் தந்தமைக்கு நன்றீங்கய்யா. வண்க்கம். வண்க்கம். வண்க்கம். (திருத்திக் கொண்டு) வணக்கம் அய்யா.