சொல்வதெல்லாம் உண்மை

இது ஒரு உண்மைச் சம்பவம். யாருடைய குறையும் ஆராயப்படவோ சுற்றிக்காட்டுவதோ நோக்கமல்ல . சினிமாவுல மட்டும்தான் எல்லா விடயங்களும் நடக்கும் என்றில்லை வாழ்கையிலும் நடக்கலாம். அதற்கு இந்த கதை ஒரு எடுத்துகாட்டு. பெயர்கள், ஒரு சில விடயங்கள் மட்டும் கற்பனை, கதையின் சுவாரஸ்யத்துக்காக. ....

காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப, குடும்ப செலவிற்று ஏற்ப ஒரு அழகான குடும்பம். எங்கள் வார்த்தை வழக்கில் சொல்லப்போனால் " அள்ளித் தின்னும் குடும்பம்" மார்க்க விடயங்களுக்காக அள்ளிக் கொடுக்கும் மனோபாவம் நிறைந்த பக்குவம் நிறைந்த ஒரு செலவாளி அந்தக்குடும்பத்தின் தலைவர். அவர் பெயர் . அப்பாஸ். வயது 30, அழகான மனைவி, வயது 18 , இரண்டு குழந்தைகள்.

அப்பாசுக்கு ஒரு தம்பி, அவன் பெயர் மனாஸ் வயது 22, அப்பாசைப்போலவே முக அடையாளம் கொண்டதனால் ஊரில் எல்லோரும் இவர்கள் இருவரையும் இரட்டையெர்கல் எனக்கூறுவது வழக்கம். மனாஸ் எப்போதும் அண்ணனின் வியாயபாரதுக்கு துணையாக இருப்பான். வீட்டில் உள்ள மற்ற வேலைகள் எல்லாவற்றையும் பார்ப்பது மேலும் வயது முதிந்த தாயை கவனிப்பதும் இவன் பொறுப்பாக இருந்தது. அப்பாசும் வியாபார விடயமாக வெளிநாடு போவது வழக்கம். இப்படியே சுமூகமான வாழ்கையின் ஓட்டம் சில வருடங்களை தாண்டியது.

திடீர் என்று ஒரு நாள் அப்பாசின் வியாபர உறவுகள் மூலம் தனது தம்பிக்கு கல்யாண வரம் ஒன்று அமைந்தது. தம்பியிடம் கேட்கவே தம்பியும் "திருமணத்திட்கு என்ன அவசரம். பிறகு செய்து கொள்ளலாம். தாயெய் யாரு கவனிப்பது, வீட்டின் பொறுப்பான வேலைகளை யாரு கவனிப்பது என்று மிக பொறுப்பாகவே பதில் அளித்தான்". அதெல்லாம் பாத்துக்கலாம் , இந்த வரம் மிஸ் பண்ணினால் கிடைக்காது" என்று அண்ணனின் வற்புறுத்தலின் பேரில் மனாஸ் திருமணத்திட்குப் பிறகும் எல்லோரும் ஒன்றாகவே இருக்கணும் என்ற ஒரு அன்பு வேண்டுகோளின் பேரில் சம்மதித்தான். அப்பாசும் இவனின் சகோதரத்துவ, குடும்ப பாசத்தை எண்ணி புல்லரித்து போனான்.

அதற்கு இணங்கியவாறே கல்யாண வேலைகள் மிக மும்முரமாக நடந்தேறியது. அப்பாஸும் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அவச அவசரமாக தனது வாகனத்தில் சொந்தங்களிடத்தில் அழைப்பு விடுப்பதில் படு பிசியாணன்.

திடீர் என வீட்டில் உள்ள மனாசுக்கு ஒரு கோல், ! அப்பாஸ் வேகமாக வண்டியெய் செலுத்தியதில் விபத்துக்கு உள்ளாகி, ரொம்ப சீரியஸ் கண்டிசெனில் உள்ளார். வந்து பார்க்கவும் என்று சொல்லி " பெயர் குறிப்பிட்ட பெரிய வைத்தியசாலை ஒன்றிலிருந்து நெருங்கிய நண்பர் ஒருவர் கோல் செய்தார்.

மனாசும் வீட்டிலே குழப்பிக் கொள்ளாமல் , பதட்டத்துடன் வைத்தியசாலையே நோக்கி விரைந்தான். அங்கு இரத்தமும் மேனியுமாய் நின்ற அண்ணனை பார்த்தவுடன் கலங்கிப்போனான். இரத்த ஓட்டம் அதிகமானதால் இரத்த சேமிப்பு வங்கியினால் அதனை மிக வேகமான முறையில் வழங்கி, தனது இரத்த தானத்தையும் வழங்கி, அப்பாசை உயிருக்கு ஆபத்தில்லாத நிலைமைக்கு கொண்டு வந்து தன் பெற்றோர் உறவினருக்கு அறிவித்தான் மனாஸ்.

இந்த அசம்பாவிதம் காரணமாக, மனாசின் திருமண நிகழ்வும் பிட் போடப்பட்டது. அப்பாசும் சுமூகமான நிலைக்கி திரும்பினான். பின் இறுதியாக ஒரு முறை வைத்தியரை அணுகி தனது நலத்தை விசாரித்து விட்டு , மிகக் கவலையோடு வீடு திரும்பினான் அப்பாஸ்.

முன்பை விட அப்பாஸ், வீட்டில் தனது பிள்ளை மற்றும் மனைவியுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதும், தம்பியுடன் எரிந்து விழுவதும் என்ற முறை கேடான போக்கை விரக்தியுடன் கையாண்டான். இதனை பல நாள் பொறுத்தாலும் சொந்தங்கள் இவரை ஒரு சைகோ (பைத்தியம்)என்ற முடிவு செய்தனர். பிறகு மனைவியும் இவரை வெறுக்க ஆரம்பித்தாள் . பிள்ளைகளும் இவரோடு உறவாட பயந்து பின்வாங்கினார்கள். பின் இவரை பைத்தியம் என்று முடிவே செய்தார்கள். பின் மனைவியும் இவரோடு வாழ முடியாது என்று விவாகரத்து செய்தாள். பின் உறவினர்கள் சேர்ந்து இவரது தம்பிக்கே இவரது மனைவியெய் திருமணம் செய்து வைத்தார்கள். தம்பியும் என்னுடைய திருமணத்தால் தான் அண்ணனுக்கு இப்படி நடந்தது என்று எண்ணி, தியாக மனப்பாங்குடன் அந்த திருமணத்தையும் ஏற்றுக்கொண்டான். அந்த திருமணம் அப்பாசின் கண்களின் முன்னிலையிலே நடந்தேறியது.

அப்போது ஏதோ சிந்தனையில் பைத்தியம் போல் உளறிக்கொண்டிருந்த அப்பாஸ், ஒரு பெரு மூச்சோடு கண்களால் கண்ணீர் கொட்டிய நிலைமையில் மனதில் ஷாந்தியனான். (அமைதியானான்) அந்த அமைதிக்கு என்ன அர்தம் என்பது அப்பாஸுக்கும் அப்பாஸை வைத்தியம் செய்த டாக்டருக்கும் மட்டுமே தெரியும் . அதன் பின் வாசகர்களாகிய நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கதையில் கொண்ஜெம் ரிவேர்ஸ் போவோம் . (பின் இறுதியாக ஒரு முறை வைத்தியரை அணுகி தனது நலத்தை விசாரிக்க சென்றதும்) '' டாக்டர் உங்களுக்கு இப்போது உடல் சீரான முறையில் இருக்கிறது .

இருந்தாலும் உங்களின் இரத்தத்தை பரிசோதிக்கும்போது ஒரு விடயம் தெரிய வந்தது. "மன்னிக்கவும், உங்களுக்கு பிள்ளை பாக்கியம் என்பது இல்லை. உங்களுக்கு பிள்ளை கிடைக்கும் வாய்ப்பு நூற்றுக்கு 99% வீதம் குறைவு. என்றதும்" . "என்ன காமிடி பண்ணுறீங்களா டாக்டர் , எனக்கு இப்போது இரண்டு பிள்ளைகள், இருகின்றன . அதற்கு என்ன அர்தம் ", என்று அப்பாஸ் வியப்புடன் கேட்டதற்கு டாக்டரும் குழம்பி போனார் . பின் அவரது இரத்த பரிசோதனை , மரபணு பரிசோதனை வழங்கி, திரும்பவும் உறுதி செய்திவிட்டு, முன்பு தம்பி மனாஸ் வழங்கிய இரத்த பரிசோதனை ரிபோர்ட் எல்லாம் பார்த்துவிட்டு தம்பியின் பிள்ளைதான் உங்க பராமரிப்பில் வளருது என்பதை உறுதி சய்து கூறினார் டாக்டர் . என்றாலும் தம்பியின் மேல் இருந்த அன்பும் குடும்பத்தின் மேல் இருந்த அக்கறையும் இதை நம்ப மறுத்தாலும் அதன் பின் ஒரு சில குடும்ப அந்தரங்க விடயங்கள் மூலம் அப்பாஸ் அதனை உறுதி செய்து கொண்டான். பின் தம்பியின் வாழ்கையில் தனது குடும்பத்தை ஒப்படைக்கவே இப்படி ஒரு சைகோ வேஷம் . அனால் இந்த வேசமே உண்மையாகி போனது தான் பரிதாபத்துக்குரிய உண்மையான நிஜமாகும். (முற்றும்)

எழுதியவர் : ரிப்னாஸ் - திக்குவல்லை - தெ (15-Aug-14, 7:58 pm)
பார்வை : 666

மேலே