தாயுமானவள்
என் இதய வீதிகளில்
குவிந்து கிடந்த கருங்கற்களை
கன்னங்களின்
கீர்த்தியினால்
கரைத்துப்போட்டவள்...,
நீ,..,என்னும்
குருகிய இலக்கணத்துக்குள்
அடைக்க முடியாத
அற்புத மாத்திரை
அவள்....,
என் சந்தோச தருணங்களுக்காய்
தென்றலாய் தேடியலைந்து
தேன் கோப்பை கொடுப்பவள்,,,
இருக்கமாய் இருந்த
என் உதடுகளுக்கு
சிரிப்பு பழகி மகிழ்ந்தவள்...,
ஜெயகந்தனையும்,
சுஜாத்தாவையும்,
என் படிப்பு மேஜையில்
நிரம்ப செய்தவள்...,
காமம் எனும் சொல்
அவள் வருகையின் பின்னரே
தற்கொலை செய்துகொண்டது,,,
வசந்தங்களை
வாரி தந்தவள்,,
வடக்கோ தெற்கோ
வழி தெரியா
ஊருக்குள் ஊரிப்போய்
விட்டாள்,,,
இவளை என்
தாய் என்று சொல்லமாட்டேன்,
என் தந்தைக்குப் பிறகு
வாழ்கையின் வாய்பாடுகளை,,
விளங்க வைத்தவள் அவள்தான்,
தோழி இல்லா எனக்கு நட்பின் பவித்திரம்
சொன்னவள்,,,
தந்தையானவள்...,
எப்படியோ உதிர்ந்தோம்,,
காலத்தின் கைகளில்
கரைந்தோம்,,,
என்றேனும் சந்தித்தால்
நான் சேமித்து வைத்திருக்கும்
ஞாபங்களை நட்பின்
வெகுமதியாய் அவளுக்கு
காணிக்கையாக்குவேன்,.....