என் நண்பனுக்காக -அரவிந்த் C

விட்டுப் பிரிகையில்
வலிக்கவில்லை..
உன் நினைவு
என்னை தொட்டு தொடர்கையில்
வலிக்கிறது..
விழியோரம் வழிகிறது
கண்ணீர் துளிகள்...

அற்முகம் ஆகிய
முதல் நொடி முதல்
இன்று நீ பிரிந்த
இந்த நொடி வரை,
நட்பை நேசித்து
பயணித்தோம்,
வாழ்க்கை பாதையில்....

உன் பயணத்தின்
வழித்தடம் மாற்றி
விலகி செல்கிறாய்,
வருந்துகிறேன் ,
விட்டு விலகி செல்கிறாய் என்று...

எங்கே செல்கிறாய்
இங்கே தானிருக்கிறாய்,
என்னுள் ,
நம் நட்புள்...
நம் நினைவுகளில்
நாம் செய்த சேட்டையின்
நினைவுகள்,
நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்
நம் நட்பை...

கண்டங்கள்
கடந்து சென்றாலும்,
என் உள்ளத்தில்
நீ நின்றாய்..
உன் வரவை நோக்கி
என் மனம் தவம் கிடக்கிறது..
உன் அழைப்புக்காக
என் கைபேசி ஏங்கி தவிக்கிறது..

வந்து விடு நண்பா
விரைவில்...

என்னை விட்டு தூர தேசம் சென்ற என் அன்பு தோழன் சிவா பிரகாஷிற்கு இக்கவிதையை சமர்பிக்கிறேன்......

எழுதியவர் : அரவிந்த் .C (16-Aug-14, 10:11 am)
பார்வை : 652

மேலே