நீ விட்டுச் சென்ற தடயம் மட்டும் பத்திரமாய்-- அரவிந்த் C

விட்டுச் சென்றாய்..
விலகி நின்றாய்..
வலிகள் தந்தாய்..

வலியில் கூட
சிரிக்கச் சொன்னாய்...
வார்த்தையின் கூரை வைத்து
கூரு போடுகிறாய்..
வலிக்கிறது....

நீ பேசுவது புரியாமல்
என்ன செய்வதென்றறியாமல்
தனிமையில் நான்..

உன் பெண்மை
என்னை அழவைக்க..
என் ஆண்மை
அதை தடுக்க...
சத்தமின்றி சங்கமித்தது
கண்ணீர் துளிகள்,
என் இதயத்தினுள்.....

ரணங்களை ரசித்து,
நினைவினை நேசித்து,
நீயளித்த காயங்களில்
என் காலங்களை
கடக்க விரும்புகிறேன் தோழி...

விடை பெறுகிறேன்
நான்
உன் வாழ்க்கை
சுவடுகளிலிருந்து...

எழுதியவர் : அரவிந்த் .C (17-Aug-14, 6:02 pm)
பார்வை : 152

மேலே