புள்ளிகளுக்காய் ஒரு முதற்புள்ளி
முற்றுப்புள்ளியல்ல
முதற்புள்ளியிது
முனைந்து நிற்கிறது
தொடர்புள்ளிகளுக்காய்...
வீழ்ந்து யோசித்து
விண்ணில் பறக்கத்தான்
வேண்டும்...
வேகமாய்...
ஆழ்ந்து யோசித்து
அறங் காக்கவும் வேண்டுமே...
அறமற்ற அறிவியல்
அகமற்ற பிம்பம்.
பக்கங்களில் முன்னேறியதாகப் பதிப்பு,
படிகளும் இல்லாமல்
பாதையும் இல்லாமல்
பாறையுச்சியைத்
தொட்டதாயொரு தொகுப்பு,
யாருக்கோவென
எள்ளினகைப்பதோர் பாதிப்பு,
இங்கே ஒளிந்துகிடக்கிறது
எனதெனும் பொறுப்பு.
மாற்றிடவேண்டும்...
மங்கிய ஒளியாய் இல்லாமல்
மாசற்ற சோதியாய்...!
பெறவேன்டும் விடுதலை
பிற்படுத்தப்படும் அவலங்களினின்று,
பிரித்துவைக்கப்பட்ட சாதியினின்று,
பிணைக்கப்பட்ட ஊழலினின்று,
பிளந்து கிடக்கும் ஒற்றுமையினின்று,
பிழயாகிப்போன அரசியலினின்று,
பெருத்துப்போன பொய்மையினின்று...
இப்படி
இன்னும்பல இணைப்புள்ளிகளை
எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது....
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழில்
ஆரம்பமாகிய
முதற்புள்ளி...