முதல் இரவு

முதல் இரவு
கண்கள் சிலிர்த்தன
உடல் வெந்து குளிர்ந்தன
புதிய பொருள் தேட இரண்டுமே நிந்தித்தன
இரு பார்வைகள் ஒன்றையே சிமிட்ட தொடங்கின
இக்கண்கள் அக்கண்களை மூடின
இரு உணர்ச்சிகளும் பரிமாற துடித்தன
பரிமாற்றங்கள் துவங்கியது மூடிய இதழ்களில்
முன்னேறி சென்றனர் அவரவர் ஆசைத்தீயில்
நான் மேலும் நீ கீழுமாய்
நீ மேலும் நான் கீழுமாய்
இருள் விளக்குகள் அணைக்கப்பட்டன
ஒருவரையொருவர் நன்றாய் அணைத்து கொண்டனர்
இன்பங்கள் பேரின்பங்கள் ஆயின
இருவரும் ஓர் நிலையில் பேரானந்தம் அடைந்தனர்
சிலர் காமத்தின் உச்சத்தை அடைவர்
அவர் உடலும் உடலும் ஒன்றுபட்டு
ஓர் முதல் இரவில் - ஆனால்
இவன் ஞானத்தின் உச்ச நிலையை அடைகின்றான்
அவன் மனமும் அறிவும் ஒன்றுபட்டு
அந்த தனிமை ஓர் முதல் நள்ளிரவில் ...!!

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (15-Aug-14, 11:25 pm)
சேர்த்தது : ஆறுமுகப்பெருமாள்
Tanglish : muthal iravu
பார்வை : 264

மேலே