எம் கவி ஞானி எங்கள் விஞ் ஞானி

நிழல்கள் தந்த வைரம்
நிஜங்கள் தந்த வைரம்
பட்டை தீட்டா வைரம்
பாட்டை தீட்டும் வைரம்
வேரின் வாசம் பாடி
விருது பெற்ற வைரம்
அதிசயம் பாடிப் பாடி
அதி! ஜயம் பெற்ற வைரம்
சின்னச் சின்ன ஆசை
சித்தரித்த வைரம்
பச்சையில் படித்த வைரம்
செம்மொழி பேசும் வைரம்
வெள்ளை உள்ள வைரம்
கருத்திருக்கும் வைரம்
தண்ணீர் தேசம் தந்த
வடுகப் பட்டி வைரம்
பொன்மணி கண்ட வைரம்
மணிவிழா கண்ட வைரம்
வேகும் பூமி கொண்ட
வெப்பம் சொன்ன வைரம்
மூன்றாம் உலகப் போரின்
அபாயம் சொன்ன வைரம்
எம் கவி ஞானி வைரம்…
எங்க(ள்) விஞ் ஞானி வைரம்……

எழுதியவர் : சு.ஐயப்பன் (17-Aug-14, 11:29 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே