அறிவியல் மொழியாகத் தமிழ்

பா.காயத்திரி
3ம் வருடம்
கலைப்பீடம்.
பேராதனை பல்கலைக்கழகம்

அறிவியல் மொழியாகத் தமிழ்

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி தமிழ் மொழி. கல்வெட்டில் இருந்து கணனி வரை பரந்து “அறிவியல்”; என்ற மொழியாக வளர்ந்து வருகின்றது.
தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும்ää தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள இரும்புää செம்பு போன்ற உலோகப் பொருட்கள் உறுதி செய்கின்றன. மருத்துவம்ää வேளாண்மைää கால்நடை மருத்துவம்ää சிற்பவியல்ää கட்டடவியல் போன்ற அறிவியல் துறைகளின் பயன்பாடுகள் பற்றிய செய்திகளை இலக்கியப் படைப்புகள்ää வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகின்றது. அவை பண்டைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட ஓலைச் சுவடிகளில் வெடிமருந்து தொழில்நுட்பம்ää கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய மரபு அறிவியல் குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு.
ஐரோப்பியரின் இந்திய வருகைக்குப் பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வெளியான அறிவியல் நூல்கள்ää இதழ்களைப் போன்று தமிழிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அறிவியல் தமிழுக்கு ஆதாரமாகும். தொழிற்புரட்சியின் காரணமாக ஐரோப்பாவெங்கும் பரவிய அறிவியல் சிந்தனைகளின் வீச்சுää தமிழ்நாட்டிலும் பரவியதன் விளைவுதான் தமிழில் அறிவியல் நூல்களின் வெளிப்பாடு. தொடக்கத்தில் தமிழ் அறிவியல் நூல்கள்ää ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் நூல்களைத் தழுவியோää மொழிபெயர்த்தோ வெளியிடப்பட்டன. இத்தகைய நூல்களுக்கு அன்று பெரிய அளவில் வரவேற்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் ஆங்கிலேயர் ‘மெக்காலே’ கல்வி முறையினைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தபோதுää சு10ழலில் மாற்றம் ஏற்பட்டது. தமிழின் மூலம் அறிவியல் பாடங்களைக் கற்கும் நிலை ஏற்பட்டபோதுää அறிவியல் மொழிபெயர்ப்புகள் பெரிய அளவில் உதவின.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதுää இன்றுää முழுமையாக அறிவியல்ää தொழில்நுட்பவியலைச் சார்ந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சியும்ää மாறிவரும் புதிய உலகின் போக்குகளை வெளிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. மேலைநாடுகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் அறிவியல் துறைகளில் நாளும் விரிவடையும் இடைவெளியைக் குறைத்திடல் வேண்டும். தமிழ்மொழியை அண்மைக் காலத்தியதாக ஆக்க வேண்டுமெனில்ää தொடக்கநிலையில் மொழிபெயர்ப்புகள் பல்கிப் பெருக வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் வாழ்க்கை வளம் அடையும்.
அறிவியல் நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் என்பது தொடரும் பணியாகும். இதன்மூலம் அறிவியல் மரபு தமிழில் உருவாகும்; அறிவியல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வளமுடையதாகத் தமிழ்மொழி வளமடையும். பின்னர்த் துறைசார்ந்த இதழ்கள் தமிழில் வெளிவரும் நிலைமை ஏற்படும்.
ஒப்பீட்டளவில் அறிவியல் மொழிபெயர்ப்பானது இலக்கிய மொழி பெயர்ப்பிலிருந்து மாறுபட்டது. அறிவியல் மொழிபெயர்ப்பில் உணர்ச்சிää சந்தம்ää ஒலிநயம்ää அலங்காரச் சொற்கள்ää ஆரவாரமான தொடர்கள் போன்றவற்றுக்கு இடமில்லை. அதே சமயம் கலைச்சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.
அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கருத்துகளுக்குத்தான் முதலிடம் தருதல் வேண்டும் ; மொழிநடை கருத்தினை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டும் அமைந்திடல் வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர்ää மூல மொழியிலுள்ள அறிவியல் கருத்துகள் பற்றிய செறிந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் வல்லுநர் மூலமொழியில் எத்தகைய குறிக்கோள் அல்லது கருதுகோளினை வலியுறுத்த விரும்பினாரோää அதனைப் பெறுமொழியிலும் கொண்டு வருமாறு மொழி பெயர்ப்பு அமைந்து இருத்தல் சிறந்த அறிவியல் மொழிபெயர்ப்புக்கு இலக்கணம் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் அறிவியில் வளர்ச்சி என்பது அறிவியல் நூல்களை மட்டும் சார்ந்தில்லாமல் அறிவியல் இதழ்களைச் சார்ந்தும் இருந்தமை கண்கூடு. இந்நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான அறிவியல் இதழ்கள் அறிவியலின் துறைகள் தோறும் தோற்றம் பெற்றன. சில தளர்நடையிட்டனää சில வீறுநடை போட்டன. வீறுநடை போட்ட இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவியல் இதழாகக் கலைக்கதிரைக் கூறலாம்.
கலைக்கதிர் புத்தம் புதிய அறிவியல் செய்திகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்னும் உயரிய நோக்கில் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் 1948 ஆம் ஆண்டில் கலைக்கதிர் என்ற திங்களிதழைத் தொடங்கினார். தொடக்கம் முதல் 1984 ஆம் ஆண்டுவரை அறிவியல் கட்டுரைகள் அதிகம் இடம்பெறும் பல்சுவை இதழாகவே வெளிவந்தது இவ்வேடு. அதன்பின் மாற்றம் பல பெற்று அறிவியல் செய்திகளை மட்டும் தாங்கிவரும் முழுமையான அறிவியல் இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அடுத்த தமிழ் அறிவியல் இதழாக யுனஸ்கோ கூரியர் இதழைக் கூறலாம்.
தமிழக அளவில் மட்டுமல்லாதுää சர்வசே அளவில் அறிவியலைத் தெளிவாகவும் சொற்செட்டோடும்ää பொருட் செறிவோடும் தமிழில் தரமுடியும் என்பதை ஆழமாகவும் அழுத்தமாகவும் உணர்த்திää நிலைநாட்டிய பெருமை யுனெஸ்கோ கூரியர் எனும் தமிழ்த் திங்கள் இதழையே சாரும். துளிர் அறிவியல் சிறுவர் இதழ் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுவர்களுக்கென்றே சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே அறிவியல் மாத இதழ் துளிர் ஆகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்ää புதுவை அறிவியல் இயக்கமும் இணைந்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று முதல் துளிர் இதழை வெளியிட்டன. சிறுவர்களின் உள்ளத்தில் அறிவியல் உணர்வை ஊட்ட வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அறிவியல் செய்திகளைத் தொகுத்துத் தருவதோடு யுரேகாää அறிவியல் கேள்வி பதில் போன்ற பகுதிகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை படித்து இன்புறும் வண்ணம் வெளியிட்டு வருகின்றது.
தமிழில் கணிப்பொறி அறிவியலைத் எழுதும் முயற்சி சென்ற நூற்றாண்டின் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். மணவை முஸ்தபாää சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கணிப்பொறி விந்தைகளைக் கதைகளில் எழுதியது மட்டுமின்றிக் கணிப்பொறி அறிவியல் குறித்துப் பொதுமக்களுக்கான நூல்களையும் எழுதியுள்ளனர். சுஜாதா கணித்தமிழ்ச் சொல்லாக்க முயற்சியாக ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். பத்திரிக்கைகளிலும் பொதுவான கணிப்பொறிச் செய்திகளை அவ்வப்போது எழுதிவந்தார். யுனெஸ்கோவின் கூரியர் தமிழ்ப் பதிப்பில் அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் தொடக்கக் காலந்தொட்டே கணிப்பொறி தொடர்பான கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.
கணிப்பொறி அறிவியலின் அனைத்துப் பிரிவுகள் பற்றியும் மேற்கண்ட இதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. சாதாரணமாகக் கணிப்பொறியின் செயல்பாடு தொடங்கிää செயற்கை நுண்ணறிவு (யுசவகைiஉயைட ஐவெநடடபைநnஉந) மீத்திறன் கணிப்பொறித் தொழில்நுட்பம் (ளுரிநச ஊழஅpரவநச வுநஉhழெடழபல) வரையிலான அதிநவீன கணிப்பொறி அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய கட்டுரைகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. மேற்கூறப்பட்ட ஐந்து இதழ்களுமே கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டுரைகளைக் கவனமாகத் தொகுத்து வெளியிடவில்லை என்ற போதிலும்ää மறைமுகமாகவேனும் கணித்தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு அவை பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவியல் களஞ்சியங்கள் அறிவியல் கல்விக்கு உற்றத் துணையாக விளங்குகின்றன. மேலும் ஒவ்வோர் அறிவியல் துறைக்கும்ää தனித்தனியாகக் களஞ்சியங்களைத் தமிழில் உருவாக்கினால்ää “அறிவியல் தமிழ்” மேன்மேலும் வளர்ச்சியடையும். தமிழ் அறிவியலில் துணை நூல்கள் இல்லை என்னும் நிலையும் மாறும்.

எழுதியவர் : GAYATHRI - university of peradeniya (17-Aug-14, 11:39 am)
பார்வை : 1872

மேலே