அரலிமர காளிஅம்மன் கோவில்

1. அரலிமர காளி அம்மன் கோயில்
அமைவிடம்:

இலங்கையிலுள்ள மாவட்டங்களில் ஒன்றாகத் திகலும் பதுளை மாவட்டத்தில் ஹாலி-எல என்ற பிரதேசத்தை மையமாகக் கொண்டு பல சிற்றூர்கள் உள்ளன. அதில் குயின்ஸ்டவுன் என்று தற்காலத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ள ராணிபட்டணம் என்ற ஊரில் அரலிமர காளி அம்மன் என்ற ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் அமைந்துள்ள ஊரின் வாழ்வாதார தொழிலாக இருப்பது தேயிலைப்பயிர்ச் செய்கையாகும். இம்மக்கள் தமது தொழிலுக்காக செல்லம் வீதியில் இக்கோயிலானது அமைந்துள்ளது.
இக் கோயிலைச் சுற்றியே மக்களின் வீடுகளும் அமைந்துள்ளன. மதில்களையோ எந்த அரண்களையோ கொண்டதாக இக்கோயில் அமையவில்லை. சிறுகட்டிடத்தின் மேல் அம்முக்கோண வடிவைக் கொண்ட கல் ஒன்று உள்ளது. இக்கல்லை தான் அரலிமர காளியம்மன் என்று கூறுகின்றனர். இன்று இவ்வாலயம் கட்டிட அமைப்பில் பல மாற்றங்களை பெற்றிருந்தாலும் ஆரம்ப கால அமைப்பு இன்றும் நிலை பெற்றுள்ளதைக் காணலாம். இக் கோயிலை அடிப்படையாகக் கொண்டு தான் குயின்ஸ்டவுனின் உள்@ர் எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் மேற்புர எல்லைகளை மேற்பிரிவு என்றும் கீழ்புர எல்லைகளை கீழ்பிரிவு என்றும் பிரித்துள்ளனர்.
இக்கோயில் இருக்கும் இடத்தில் பெரிய ஆலமரம் ஒன்றும் அரலி மலரரும்புகளை மொட்டவிழ்ககின்ற அரலிமரம் ஒன்றும் உள்ளன.. இதில் பலவருடகால பழமை வாய்ந்த ஆலமரமானது கோயிலைச் சுற்றி விழுதுகளால் நிரம்பியுள்ளது.
இம்மரத்தில் வெள்ளை நிறம் கொண்ட நாகபாம்பு ஒன்றும் வாழ்ந்து வருகின்றது என்று இவ்ëர் மக்கள் நம்புகின்றனர். இந்நாகத்தை பலபேர் கோயிலின் சுற்றுபிரகாரங்களில் நேராக கண்டும் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அக்கோயிலைத் தவிர அந்நாகம் வேறு சுற்றுச்சூழல்களுக்கு போவதில்லை என்றும் கூறப்படுகின்றது. அவ்விடத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் ஒரு புற்று தரையோடு இருக்கின்றது. அது தான் அதன் வாழ்விடம் எனக் கூறப்படுகின்றது. அக்கோயிலுக்கு அருகில் இருந்த நிலத்தில் சமீபக் காலத்தில் (2013ம் ஆண்டு) அவ்ëரில் உள்ள இந்து இளைஞர் மன்றத்தால் அறநெறிப்பாடசாலை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் அமைப்பைக் கொண்டிருக்கும் இக்கோயிலுக்கு வடக்கில் ஒரு முருகன் ஆலயமும் தெற்கில் “ முனி ” என்ற தெய்வத்துக்கான ஒரு சிறு கல்கட்டிட ஆலயமும் வடக்கில் மாரியம்மன் ஆலயமும் மேற்கில் ஆலமரத்தடி பிள்ளையார் ஆலயமும் அமைந்துள்ளன. இவ்வாலயங்களுக்க மத்தியப் பகுதியிலேயே அரலிமர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி மக்களின் வீடுகளும் தோட்டங்களும் இருக்கின்றன. இவ்வாறானதொரு பாங்கில் அரலிமர காளியம்மன் ஆலயத்தின் அமைவிடம் உள்ளது.

2. அரலிமர காளி அம்மன் கோயில் வரலாறு:
ஹாலி-எல பிரதேசத்தில் குயின்ஸ்டவுன் என்ற பகுதியில் அமைந்துள்ள அரலிமர காளியமமன் என்ற கோயிலானது தோன்றிய வரலாற்றைக் நோக்குவோமாயின் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொய்டுவரப்பட்ட அந்திய வம்சாவழி மக்கள் இப்பகுதியில் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு அவர்கள் குடியேறிய சில நாட்களில் தமது வேலைத்தளங்களில் அனுபவி;த்தக் கொடுமைகளை சொல்லி அழுவதெற்கென்று தமக்குள் ரஒருவரை நியமித்து இருந்தனர். அவர் பெயர் காளியப்பன். இவர் அம்மக்களுககு நடந்த கொடுமைகளை கேட்பதற்காக தோட்ட முகாமையாளரிடம் சென்றிருந்தார். அவரோடு அவ்ëரில் உள்ள சில தொழிலாளர்களும் சென்றிருந்தனர். சென்ற இடத்தில் வாய்வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதன் விளைவுää மறுநாள்; தேயிலைத் தோட்ட கானுக்குள் இருந்து காளியப்பனின் பிணம் கண்டெடுக்கப்பட்டதே ஆகும். மக்களின் மனதிற்கு ஒரு சிறு ஆறுதலாக இருந்தவரும் தங்களைவ ட்டுச் சென்று விட்டாரே என்ற மன்கவலையில் இருந்த மக்களுக்கு மனதில் நம்பிக்கையும் தைரியத்தையும் ஊட்டும் முகமாக ஒரு செய்தி தோட்டமே பரவ ஆரம்பித்தது. அதாவது பெருமாள் என்பவரின் கனவில் தோன்றி நெத்திகான் என்ற அவ்ëர் மக்களால் கூறப்படும் ஒரு சிறு ஓடையின் அருகில் வளர்ந்துள்ள அரலிமரத்துக்கு ஒரு பெரிய கல் ஒன்று படுத்திருப்பதாகவும் ää அது வேறு யாரும் இல்லை தன் இஸ்ட தெய்வமான காளியே என்றும்ää அவளை எடுத்து அரலிமரத்தின் அடியில் அக்கல்லின் முனைப்பு பகுதி வானுயர பார்க்கும் படி வைத்தால் மக்களின் கஸ்ட காலத்துக்கு விடிவு பிறக்கும் என்றும் கூறியதாக பெருமாள் தோட்ட மக்களுக்கு கூறினார்
இச்செய்தியை அத்தோட்ட மக்களில் சிலரே நம்பவில்லை என்றும் அதனை நம்பியய அனைவரும் அங்கு சென்று பார்த்த போது காளியப்பன் பெருமாள் கனவில் சொல்லியது போன்ற அமைப்பைக் கொண்ட கல் ஒன்று இருந்ததை கண்டு அதிசயித்தனர். பின்னர் அக்கல்லை எடுத்து காளியப்பன் கூறியது போல அரலி மரத்தின் அடியில் வைத்தனர் என்றும் மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. ஆனால் அக்கல்லிற்கு வழிபாடோ அல்லது வேறுவிதமான éசை முறைகளோ இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டது. பிறகு பெருமாள் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் மனம் நொந்து போய் இருந்த சமயம் தன் மன திருப்திக்காக அரலிமரத்தடிக்க அனுதினம் போய்வருவாராம். அவ்வாறு அவர் ஒவ்வொரு நாளும் செல்லும் போது அம்மரத்தைச் சுற்றி சிறுசிறு பகுதியாக சுத்தம் செய்தார்.
அவ்வாறு ஒரு நாள் அவர் சுத்தம் செய்யும் போது திடுக்கிற்று போனார். காரணம் ஓர் ஆள் உயரத்துக்கு ஆலமரம் ஒன்று வளர்ந்திருந்தது. கல்லைக் கொண்டு வைக்கும் போது அவ்விடத்தில் ஒரு அரலிமரத்தை தவிர எந்தவொரு மரமும் இல்லை. ஆனால் திடீரென்று வளர்ந்துள்ள ஆலமரத்தைக் கண்டு வியந்து அவரை அறியாமலேயே அவரது கைகள் கல்லை கைக்கூப்பித் தொழுதன. இவ்வாறு இவர் துளிர்விட்ட நம்பிக்கை விருட்சமாக வளர்நத்து. இதன் விளைவாக ஒரு நாள் தன் உறவினர்கள் தனக்க குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி பழித்தூற்றவும் அவர் மனவேதனையோடு அரலிமரத்தடிக்குச் சென்று கண்ணீர் விட்டு “எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகுமானால் உன்னை நான் என்றும் தொழுவேன்” என்றுக் கூறி அவ்விடத்தில் வளர்ந்து வந்த ஆலமரத்தில் மஞ்சள் நீரில் நனைக்கப்பட்ட வெள்ளைத் துணி ஒன்றில் ஒரு சதத்தை அதில் முடிந்து கட்டினார். அவர் அம்முடிச்சியைக் கட்டி இரண்டு மாதத்தின் பிறகு அவரின் மனைவி கருவுற்றாள். அன்று அவர் அனைவரிடமும் கூறியது என்னவென்றால் “ எல்லாம் அரலி மர காளியம்மன் செயல்” என்று. அவளின் பெருமையை தோட்ட மக்களுக்கும் பரப்பினார். பிறகு ஒவ்வொருவரும் தனது குறையை ஆலமரத்தில் கட்டி வந்தனர். நாட்கள் கழிந்துக் கொண்டே சென்றது வெரும் தரையில் இருந்த கல்ää கற்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல் ஏற்றி வைக்கப்பட்டது.
முதலில் கற்éரம் மட்டும் ஏற்றப்பட்டு வந்த இடத்தில் éக்களும் éமாலைகளும் சாத்தப்பட்டு வந’தன. இதன் தொடர்ச்சி காணிக்கையாக தாம் வளர்த்து வந்த உயிரினங்களை வழங்கினர். யாருக்கும் நோய் ஏற்பட்டாலோää அல்லது அல்து வேலைத்தளங்களில் ஏதும் விபத்து ஏற்பட்டலோ அம்மனுக்கு காணிக்கை செலுத்தினால் தம் துன்பங்கள் காற்றாய் மறைந்து விடும் என்று எண்ணினர். பின்னர் காளியம்மனுக்கு ஆடுமாடுகளை வெட்டி அதனை கோயிலிலே நெருப்பு மூட்டி சமைத்து அம்மனுக்கும் படைத்து தாமும் உண்டனர். அரலிமர காளியம்மனிடம் தஞ்சம் புகுந்தவர்கள தன்; துன்பங்கள் தீர்த்தவள் காளியம்மன் தான் என நம்பினார்கள். இந்த நம்பிக்கைகளும் எண்ணங்களும் தான் இன்று “அரலிமர காளியம்மன்” என்ற ஆலயம் நிலைக்க ஆதாரமாக அமைகின்றன.
காலத்தின் ஓட்டமும் காளியம்மனின் அருட் திறமும் அவ்ëர் மக்களின் மனதில் பாரிய நம்பிக்கையை உதயமாக்கியது. பெருமாளின் வழிவந்த பக்தர் கூட்டங்கள் அம்மனின் கருணையால் அருளப்பட்டு வந்தனர். அவ்ëரில் உள்ள ஒரு தோட்டத்தொழிலாளி தன் வேலைத்தளத்திற்கு அக்கோயில் வழியாக செல்லும் போது Àயவெள்ளை நிறம் கொண்ட கயிரொன்று கிடப்பதைக் கண்டு அவ்விடத்தை நெருங்கும் போது கயிறு அசைவதை கண்டு வியந்து சற்று உற்றுப் பார்த்தார். அப்போது தான் அவருக்கு புரிந்தது அது கயிறல்ல வெள்ளை நாகம் என்பது புரிந்தது. அதை அறிந்ததுமே அதே கனம் அவர் மயங்கி விழுந்தார். மயங்கி கிடந்த தொழிலாளிகளைக் கண்ட ஏனையவர்கள் அவரை மயக்கத்தில் இருந்து எழுப்பி கேட்ட போது அவர் தன் கண்ணால் கண்டதை அங்குள்ளவர்களிடம் தெரிவித்தார். அதை கேட்ட ஊர் மக்களும் வியந்து போய் நின்றனர். பறகு ஒரு நாள் காணிக்கை செலுத்த வந்த ஒரு குடும்பத்தினர் ஆலமரத்தின் மேல் வெள்ளை நாகம் இருந்தததைக் கண்டனர். அது வரைக்கும் அம்மனை மட்டும் வழிபட்ட மக்கள் அக்கோயிலில் உள்ள நாகத்தையும் வழிபட ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் அச்சம் தான் இறை நம்பிக்கையை ஏற்படுத்தின என்ற கொள்கை இங்கு நிறுபிக்கப்படுகின்றது. நாகத்தை கண்ட நாள் முதல் நாகவழிபாடும் இக்கோயிலில் பிரசித்தி பெற்றது. அதுமட்டுமல்ல இந்நாகத்தை எதிர்பாராத விதமாக காண்பவர்களுக்கு நல்ல விடயங்கள் அடுத்தடுத்து நிகழும் என்றும் கூறுகின்றனர்.
திருமணமாகாத பெண்கள்ää குழந்தையில்லாத பெண்கள்ää பாம்பு தீண்டியவர்கள்ää வி~éச்சி தீண்டியவர்கள் என பால வகைப்பட்டவர்களின் காண்க்கைகளும் நடத்தப்பட்டு வந்தன. மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காண்க்கை செலுத்தும் முக்கிய இடமாக இவ்வாலயம் அடையாளப்படுத்தப்பட்டது. துன்பம் எனும் போது சாதிகள் காணாத மனிதர்கள் தம் வாழ்க்கை நலம் பெற ஆரம்பிக்கும் போது சாதிக் கொள்கையை தன் உயிருக்கும் மேலாக காத்து நடப்பர். அந்த வகையில் இவ்ëரிலும் தொழிலாளியாக கொண்டுவரப்பட்ட இம்மக்களின் மத்தியில் சாதி தலைவிரித்தாட ஆரம்பித்து. இதனால் கோயில்களும் சாதியால் வேறுபாடு காட்ட வேண்டியதாயிற்று. இவ்வகையில் இன்று மலையக பகுதியில் காணப்படுகின்ற சாதியில் உயர்ந்தவனே ஊரிலும் உயர்ந்தவனாக கொள்ளப்பட்டான். அதனால் பின் வந்த சாதி பிரச்சனையில் அரலிமர காளியம்மனுக்கும் சாதி வகுக்கப்பட்டது. எவன் குடியானவனாக அடையாளப்படுத்தப் பட்டானோ அவனே கோயிலின் உரிமையாளனாகவும் அடையாளப்படுத்தப்பட்டான்.
சரித்திரங்கள் பெருகும் போது சமூக கட்டமைப்புக்கும் வேலைப்பளு அவிகமாகும். என்ற கருத்தின் படி இன்று அவ்ëரில் உள்ள பெருங்குடி சாதி இளைஞர்கள் அக்கோயிலை ஆகமம் சார் கோயிலாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் தொடக்கமாக கோயிலின் நிர்மாண பணியைக் கூறலாம். மேலும்ää அம்மன் திருவுருவசிலை ஒன்று செதுக்கப்பட்டும் மற்றுமொரு திருவுருவ சிலையும் எண்ணைக்காப்பு செலுத்தி பிரதிஸ்டை செய்யப்பட்டது. இதன் வளர்ச்சி இனியும் தொடர்ந்து செல்ல உள்ளது. இவ்வாறாக அரலிமர காளியம்மன் ஆலயத்தின் வரலாறு அமைந்துள்ளது.

3. அரலிமர காளி அம்மன் கோயில் பெயர் வரக் காரணம்

அரலிமரக் காளியம்மன் என்ற பெயரானது அவ்விருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு வந்தது. அரலிéக்கள் நிறைந்து பொழிகின்ற மரத்தின் கீழ் அவ்வாலயம் இருப்பதால் அரலிமரத்தடியில் உள்ள காளியம்மா எனப் பேசப்பட்டு ää பேசப்பட்டு இறுதியில் அரலிமர காளியம்மன் என்ற பெயர் உண்டாயிற்று. வாiருவிழாக்காலங’களிலும் இப்பெயரே இடப்பட்டுள்ளன.
கோயில் நிர்வாகம்
கோயில் நிர்வாகம் என்று கூறும் போது அக்கோயிலை மையமாக கொண்டு இயங்கி வருகின்றன. அவ்ëரில் உள்ள அக்கோயிலுக்கு உரித்தான சாதி மக்கள் எல்லோரும் ஒரு நாள் ஒன்றினைந்து அக்கோயிலை பராமரிப்பதற்கு அவசியமான தலைவர்ää செயளாலர்ää பொருளாலர்ää அங்க உறுப்பினர்கள் எனக் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை தெரிவு செய்வர். பிறகு அவர்களின் தலமையின் கீழ் அக்கோயில் நிர்வாகம் இயங்கும். வாரங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த குடும்பங்கள் தனக்கு தனக்கென்று தெரிவு செய்த வாரங்களில் éசைகளைச் செய்வர். அதில் உண்டாகின்ற அனைத்தும் அவர்களின் செலவாக ஒதுக்கப்படும்.
திருவிழா செய்யும் போது அவ்ëரில் உள்ள குறிப்பிட்டத் தொகையை வழங்குவர். அது இல்லாமல் தோட்ட முகாமையாளரின் உதவித் தொகை மற்றும் ஏனையவர்கள் விரும்பி தருகின்ற உதவித்தொகை என்பனவற்றை வைத்துக் கொண்டு திருவிழாவின் செலவுகளை திட்டமிட்டு வெய்வர். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தலைவன்ää செயலாளர்ää பொருளாலர் என்ற பதவிகளின் உறுப்பினர்கள் மாறி மாறி தெரிவு செய்யப்படுவர். ஆரம்பத்தில் இது போன்ற முறைகள் காணப்படாவிட்டாலும் இன்று பற்று சீட்டின் மூலம் பணம் வசூலித்தல்ää திருவிழா பத்திக்கைக் கொடுத்தல் போன்ற முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.


4. அரலிமர காளி அம்மன் கோயில் திருவிழாச் சடங்குகள்
சிறுதெய்வ வழிபாட்டில் வழிபாட்டுச் சடங்குகள் ஏனைய ஆகமம்சார் வழிபாட்டு முறைகளிலிருந்து வேறுபடுபவையாகும். அரலிமர காளியம்மன் கோயில் மூன்று நாள் திருவிழாக் கோலம் éணும். இக்கோயிலில் éசை செய்பவர் பண்டாரம் என்ற பெயரால் அவ்ëர் மக்களால் அழைக்கப்படுவார். இவர் இக்கோயில் உருவானதில் இருந்து éசை செய்து வரும் பரம்பரையை சேர்ந்தவராக இருப்பார். முதல் நாள் அம்மனுக்கு மாவிளக்கு éசை நடைபெறும்இதில் அவ்ëரில் உள்ள மக்கள் குறிப்பாக குடியானச் சாதியைச் சேர்ந்த மக்கள் இப்éசையை செய்வார்கள். மாவிளக்கு éசை என்பது பச்சரிசியை இடித்து எடுத்து அதில் சீனபாகுபாடுää பட்டாணிக்கடலைää கற்குää எள்ளு என்பன கலந்து செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டமாகும். இதனை பல்வேறு வகையிலான உருவங்களில் செய்வர். இவ்வாறு செய்யப’பட்ட வடிவத்தின் நடுவில் பெருவிரலால் விளக்கு இடுவதற்குஎண்ணெய் தேங்கி நிற்கக் கூடியவகையில் அம்ழ்த்துவர். பின் அதில் ஏற்படும் குழி போன்ற வடிவத்தில் எண்ணெய் இட்டு அதில் திரியும் இட்டு விளக்கேற்றுவர்.
இவ்வாறு மாவால் விளக்கிடப்பட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மா விளக்குகளை காளியம்மனின் முன்னால் வைத்து வழிபடுவர். பெரும்பாலும் இதனை கழந்தைப் பேறு இல்லாதவர்களால் திருமணமாகாதவர்களால் நிகழ்த்தப்படும். இப்éiசையை ஒவ்வொரு வீட்டிலுள்ள தலமைப் பெண்கள் செய்வர். இவ்வழிபாட்டுச் சடங்கு ஆரம்பத்தில் இல்லை என்றாலும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இப்éசை உள்வாங்கப்பட்டது. இப்éசையில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் செய்து கொண்டுவரப்பட்ட மாவிளக்குகளில் நான்கின் ஒரு பகுதியை அம்மனுக்கு படைப்பர். இவ்வாறு நிகழ்த்தப்படும் இம்மாவிளக்கு சடங்கானது பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். இம்மாவிளக்கை பண்டாரம் அம்மனுக்கு படைக்கும் போது பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி குலவையிடுவர். பிறகு அம்மன் புகழ் இபாடும் பாடல்களையும் ஒரு புலம்பல் போல அல்லது கும்மி அடித்துக் கொண்டு பாடுவதும் வழக்கமாக உள்ளது. இவ்வாறு முதல் நாள் éசை ஆரம்பமாகி முடிவுறும்.
அடுத்த இரண்டாவது நாள் éசையாது கரகம் எடுத்தல் என்ற சடங்குடன் ஆரம்பமாகும். இக்கோயிலில் சாமிஆடுவதற்கென்று ஒருவர் இருப்பார. அவர்காளியம்மனின் முன்னால் வந்து நின்று அவளைப் பார்த்தப்படி கைகள் உதர கால்கள் நடுங்க கைகள் இரண்டையும் ஒன்றாக மேலே தூக்கியபடி அம்மன் உரு ஏறி ஆடுவார். இவ்வாறு ஒரு ஏறி ஆடிக்கொண்:டு வெளியே வரும் போது கோயிலுக்கு வந்திருக்கும் ஆடவர்களின் மத்தியில் மூன்று ஆடவர்கனைத் தெரிவு செய்து கரகம் தூக்கப்படும். இததெரிவு முறையானது சாமியாடல் மூலம் இடம்பெறும்.இதன் போது சாமியாடுபவரின் கையில் கொடுப்பர். அவர் அந்த சேவலின் கழுத்தில் வாய் வைத்து இரத்தத்தை உறிஞ்சு குடித்த பின்னர். கோயிலின் மேற்கு பக்கம் நோக்கி அச்சேவலை வீசுவார். அவர் அதனை வீசும் போது யார் மீதும் படாதவாறு வீசுதல் வேண்டும். அவ்வாறு வீசும் போது யார் மீதாவது பட்டுவிட்டால் அது தோசம் என்றும் சொல்லப்படும். இந்நிகழ்ச்சிக்கு பிறகு சாமியாடுபவரின் கையில் நான்கு தேசிக்காய் கொடுக்கப்படும். அவர் அதனை வாயால் கடித்து கோயிலின் எட்டு திக்குக்கும் வீசுவார். இது முடிய சாமியாடுபவர் குறிப்பிட்ட நபர்களைக் கூப்பிட்டு இது வரை நடந்த சடங்குகளில் ஏற்பட்ட குறைபாடுகளைச் சொல்லுவார்.
பிறகு கரகம் தூக்குவவதற்கு உரியஆண்களை தெரிவு செய்து தருமாறு வேண்டுவர். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இளைஞர்கள் மத்தியில் இருந்து மூவரை தெரிவு செய்வார். அவ்வாறு தெரிவு செய்து எடுப்பவர்கள் குறிபபிட்ட சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பர். இம்மூவரும் மஞ்சள் நீரால் நீராடிய பின்னர் விéதிääசந்தனம்ääகுங்குமம் என்பவற்றை உடல் முழுவதும் éசி பட்டுக்களை இடுப்பில் கட்டி கரகத்தை தூக்கித் தலையில் வைப்பர். மூவரில் இருவருக்குத் தலையில் கரகமும் ஒருவரின் கையில் தேசிக்காய துத்தப்பட்ட நீண்ட கத்தி ஒன்றும் கொடுக்கப்படும். இக்கரகத்தில் அம்மனை எழச்செய்து ஊரில் சுற்றி வந்து இறுதியில் கோயிலில் கொண்டுவந்து வைக்கும் சடங்கே சக்தி கரகம் எடுத்தலாகும்.கரகத்தில் சற்று பெரியது காளியம்மன் என்றும் அதைவடைச் சற்று சிறியது மாரியம்மன் என்றும் கத்தி காவல் தெய்வமான மதுரைவீரன் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு மூவருக்கும் கரகம் கையில் கொடுக்கப்பட்ட பின்னர் “அரோகரா” என்ற ஆரவார சத்தத்துடன் சாமியாடியவர் தீச்சட்டியை எடுத்து அம்மூவருக்கும் முன்னால் நடப்பார். இத்தீச்சட்டியின் அடியில் திருநீறும் அதற்கு மேல் கற்éரக் கட்டிகள் எரிந்த வண்ணம் இருக்கும். அதனை வேப்பிலை இலைகளால் சாமியாடுபவர் பிடித்து கரகத்தின் முன்னால் நடப்பார்.இவர்களின் பின்னால் தமிழர்களின் வாத்திலமாக கொள்ளப்படும் பறை முதலியவை இசையை எழுப்ப கரகத்தின் பின்னால் வருபவர்கள் ஆடியும் பாடியும் வருவார்கள்.
இவ்வாறு கோயிலிலுருந்து கரகம் வரத் தொடங்கும் போது ஒவ்வொரு வீட்டின் சுவாமி அறைகளும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும். அத்தோடு வீட்டின் கதவு வாயில்களில் éக்களும் மாவிலைகளும் தொங்கவிடப்பட்டு வீட்டின் முன்னால் கோலம் போட்டு அதில் மஞ்சள் கலந்த நிகைகுடத்தையும் வைத்திருப்பர். அதுமட்டுமல்லாது ஒரு தட்டில் éசை பொருட்களையும் வைத்திருப்பர். அதில் கற்éரம்ää பத்திää வெற்றிலை பாக்குää பழம்ää தேங்காய் என்பன இருக்கும். ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் மிக பயபக்தியுடன் வரவேற்பர். தன் வீட்டிற்கு வருகின்ற அம்மூன்று பேரையும் காளிää மாரிää மதுரைவீரனே வருகின்றனர் முழுமையாக நம்புவர்.
ஒவ்வொரு வீட்டிலும் போடப்பட்டிருக்கும் கோலத்துக்கு பின்னால் அம்மூவரும் கரகம்ää கத்தியோடு நிற்க தீச்சட்டி ஏந்தி சாமியாடிக் கொண்டு வருபவர் மட்டும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று சுவாமி அறையில் சுவாமி திருவுருவ படங்களுக்கு தீச்சட்டிலை மூன்று முறை சுற்றிக்காட்டிவிட்டு அருள்வாக்கு சொல்வார். அவர் அருள் வாக்கு சொன்ன பிறகு பிரசாதமாக வேப்பிலையும் திருநீறும் கொடுத்துவிட்டு வெளியே வருவார். அதன்பின் அவ்வீட்டிலுள்ள தiலைவி அல்லது பெண்பிள்ளை யாராவது கரகத்தை தூக்கி வந்திருப்பவர்களின் கால்களுக்கு கோலத்தில் வைத்திருக்கும் நிறைகுடத்தை அம்மூவரின் கால்களிலும் ஊற்றிவிட்டுää அவர்களின் கால்களில் விழுந்து வணங்கி எழும்புவர்.
இவ்வாறு ஒவ்வொரு வீட்டிற்கும்கரகம் வந்து செல்லும் போது ஒவ்வொரு வீட்டாரும் இதே முறையில் தமது கடமைகளை செய்வார் . அவர்களது நம்பிக்கையில் மூன்று தெய்வங்களும் தங்கள் வீட்டிற்கு வந்து போவதாக எண்ணுகின்றனர். இக்கரகம் தூக்கும் சடங்கானது அவ்ëரில் மிக விமர்சையாக நடைபெறும். பல npன்னபண்களும் இச்சடங்கில் ஆடியும் பாடியும் பின்னால் வருவர். ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று வந்த பிறகு தீச்சட்டியை ஏந்தி வந்தவரே கரகத்தை இறக்கி வைப்பார். அத்தோடு பண்டாரம் அம்மனுக்கு இறுதியாக ஒரு éசை செய்வார். அதற்கு முதல் சாமியாடி வந்தவருக்கு தெய்வம் அவரது உடலில் இருந்து மலையேற பண்டாரம் அவரது நெற்றியில் திருநீறை éசுவார். அந்த கணமே சாமியாடுபவர் மயங்கி விழுவார். அவ்வாறு விழுந்தவரை அங்கிருந்தவர்கள் தேற்றி எழுப்புவர். இவ்வாறறாக இரண்டாம் நாள் சடங்கு இனிதே நிறைவுறும்.
அடுத்து மூன்றாம் நாள் திருவிழாவானது பலியிடல் அற்றும் காணிக்கை செலுத்துதல் என்ற முறையிலான சடங்கு நடைபெறும். இரண்டாம் நாள் வடங்கில் சாமியாடியவரே அம்மனுக்கு நேத்தியாக வந்திருந்த சேவல்களை வெட்டி பலியிடுவார். இக்கோயிலில் சேவல் மட்டுமே பவியிடப்படும். அவ்வாறு பலியிட்ட சேவல்களை எடுத்து பக்தர்கள் கறி சமைப்பர். பிறகு முழு வாழையிலை ஒன்றில் ஆக்கிய சோற்றையும் கறியையும் வைத்து அம்மனுக்கு படையலிடுவர். இப்பலியிடல் சடங்கானது இரவிலேயே நடைபெறும். இச்சடஙகில் ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்வர். பெண்கள் இதில் கலந்து கொள்வது இல்லை. அம்மனுக்கு பலியிட்ட இந்த ஊன் உணவை பெண்கள் சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுகின்றது. இத்தோடு மூன்றாம் நாள் சடங்கு இனிதே நிறைவுறும்.
இவ்வாறானதொரு முறையில் அரலிமர காளியம்மன் திருவிழாச்சடங்கானது நடைபெறும். இதில் முதலாவது மாவிளக்கு சடங்கின் போது நாகவழிபாடும் இடம்பெறும். இந்நாக வழிபாடானது அம்மனுக்கு éசை செய்யும் போது அதNhடு சேர்த்தே செய்யப்படும். இப்éசையானது நாகம் தங்கும் இடமாக கொள்ளப்படும் ஆலமரத்தின அடியில் செய்யப்படும். அவ்விடத்தில் ஒரு விளக்கும் வெண்பொங்கள் படையலும் இடுவர். நான்காம் நாள் மஞ்சள் நீராட்டலும் நடக்கும். அதாவது அம்மனின் சூலத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த ஊரில் உள்ள தவறணை என்னும் இடத்தில் உள்ள ஓடை ஒன்றில் சூலத்திற்கு மஞ்சள் நீராட்டு நடைபெறும். இதனை அக்கோயிலின் éசகரே நிகழ்த்துவார். அங்கு நீராட்டு முறை நடைபெற்று முடிய அந்த ஊரில் உள்ள மச்சான்ää மச்சினிச்சி மாமாää அண்ணி முறைபெண் என்ற உறவு கொண்டவர்கள் நீரில் மஞ்சளைக் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றிக் கொள்வர். இச்சடங்கின் போது ஊரே மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும். இவ்விழாவோடு இக்கோயில் சடங்குகள் இனிதே நிறைவுறும். இவ்வாறாக அரலிமர காளியம்மன் ஆலயத்தின் திருவிழாச் சடங்குகள் இடம்பெறும்.
5. அரலிமர காளி அம்மன் கோயில் நேர்த்திக்கடன் மகிமை
நேர்த்திக்கடன் என்பது தான் செய்யப்போகும் செயல் இனிதாக நிறைவேற வேண்டும் என்றோ அல்லது தான் நினைத்த காரியம் வெற்றியாக நிறைவேற்ற வேண்டும் என்றோ மக்கள் மனதில் நினைத்து கடவுளிடம் நேர்த்தி வைக்கும் ழசர முறையாகும். இம்முறையை நாம் அரலிமர காளிகோயிலை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது. பக்தர்கள் அம்மனிடம் வைத்திருக்கும் நேர்த்தியை திருவிழாவின் மூன்றாம் சடங்கின் போது காணலாம். இச்சடங்கின் போது குறைந்தது பத்து சேவராவது நேர்த்திக்கடனுக்கு என்று பலியிடப்படும். இதனைக் கொண்டு இக்கோயிலில் நேர்த்தி வைப்பதன் அவசியத்தையும் அந்நேர்த்தியின் சிறப்பையும் காணக்கூடியதாக இருக்கும். பெரும்பாலான நேர்த்தி கடன்கள் குகுழந்தை பேறு இல்லாமல் இருந்தவர்களாலும் திருமணம் ஆகாமல் இருந்த பெண்களாலும் செய்யப்படும். ஆய்வில் பெரும்பாலானவர்களின் கருத்து என்னவென்றால் இக்கோயிலில் நேர்த்தி வைத்து எவரும் ஏமாந்து போனதில்லை என்பதாகும். இதன் மூலம் இக்கோயிலில் செய்யப்படும் நேர்த்தியிpன் மகிமையை அறியமுடிகின்றது. மேலும் நேர்த்தியை உயிர் பலியாக கொடுக்க விரும்பாதவர்கள் ஒரு தூய்மையான வெள்ளை துணி ஒன்றை எடுத்து அதை மஞ்சள் கலந்த நீரில் நனைத்து அதில் ஒற்றை நாணயம் ஒன்றை வைத்து முடிந்து அதனை கோயிலில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ள சூலத்தில் கட்டுவர். இக்கோயிலின் சிறப்பே பக்தர்களால் வைக்கப்படும் நேர்த்திக்கடன்கள் நிறைவேறும் நம்பிக்கையே ஆகும். இந்த நேர்த்திகடன் வைப்பதில் சாதிகள் பார்ப்பதில்லை. துன்பத்தால் வாடும் எவரும் வைக்கலாம். அந்த ஊரில் உள்ள மக்களிடம் அரலிமர காளியம்மனின் சிறப்பு மேலோங்கி விளங்க இந்நேர்தியில் அக்களுக்கு கிடைக்கும் நன்மையும் காரணமாக அமைகின்றது என்பது ஆய்வின் முடிவாகும்.

6. அரலிமர காளியம்மன் ஆலயம் மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கு
அரலிமர காளியம்மன் ஆலயமானது அவ்ëர் மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை ஆராய்ந்த போது ஆராய்வுக்கான முடிவை அம்மக்களே கொடுத்தனர். அவ்ëரிலுள்ள மக்களிடம் இக்கோயில் பற்றக்p கேட்கும் போது அவர்கள் கூறிய பதிலே அவர்களின் மத்தியில் கோயில் பெற்றிருந்த செல்வாக்கையும் சிறப்பையும் அறியக் கூடியதாய் உள்ளது. இம்மக்களின் பதில்களும் பதிவுகளும் பின்வருமாறு அமைகின்றன.
செல்லதுரை (கோயில் தலைவர்)
நானும் என்னுடைய பரம்பரையை சேர்ந்தவர்களும் பழங்காலந் தொட்டே இறைவனை வணங்கி வருகின்றோம். நான் சிறுவயதாய் இருக்கும் போது எனது அப்பாவுடன் தோட்டத்திற்கு சென்றிருந்தேன். எனது அப்பா ஒருபுறம் வேலை பார்த்துக் கொண்டிருக்க நான் ஒருபுறம் விளையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம் நாகபாம்பு ஒன்று இருந்ததை அறியாது அதை மிதித்து விட்டேன். அதனால் அது என் காலைக் கடித்துவிட்டது. அங்ஙனமே நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். நான் விழுந்ததைக் கண்ட என் தந்தை என்னை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார் செல்லும் வழியில் இக்கோயிலைக் கண்டு “என் மகனுக்கு எந்தவித ஆபத்தும் வரக்கூடாது அவ்வாறு அவன் மீண்டும் வந்தவுடன் அவன் கையாலேயே சேவல் வெட்டி பலியிடுகிறேன” என்று கூறிவிட்டு அங்கே வந்தவர்களின் துணையுடன் என்னை வைத்தியசோலைக்கு Àக்கிச் சென்றார்.
நான் உயிரோடு இருப்பதே இந்த அரலிமர காளியம்மனும் அவளுக்கு வைத்த நேர்த்திக்கடனும் தான்ää என்று கூறி நான் நலம் பெற்ற மறுநாளே அம்மனுக்கான நேர்த்திக் கடனை செய்து முடித்தார். இவ்வாறு எனது வாழ்க்கைக்கு மட்:டமல்ல இவ்ëரில் உள்ள பலரின் வாழ்க்கையையும் காப்பாற்றியவள்ää இந்த அரலிமர காளியம்மன் ஆவாள்.

முனியாண்டி (தேயிலைத் தோட்ட தொழிலாளி)
எனது பெயர் முனியாண்டி. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இக்கோயில் இங்கு தான் உள்ளது. நான் இக்கோயிலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்று சுத்தம் செய்வேன். நான் அரலிமர காளியம்மனின் தீவிர பக்தன். அவள் பலமுறை னெது கனவிலும் தோன்றி உள்ளாள். எனது மக்கள் செவ்வாய் தோசம் இருப்பதால் முப்பது வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அதனால் எனது மகளின் நிலமையை ஒவ்வொரு கனமும் எண்ணி வருந்தினேன். அதன் பிறகு என் கஸ்டத்தை அரலிமர காளியம்மனிடம் கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன். என் கஸ்டத்தை கேட்ட அவள் என் மகளுக்கு கல்யாண யோகத்தை தந்தாள். இன்று எனது மகளுக்கு 20 வயதில் ஒரு பெண் குழந்;தையும் 15 வயதில் ஒழு ஆண் குழந்தையும் இருக்கின்றன. அரலிமர காளியம்மனின் முன்னால் எங்கள் துன்பங்கள் எல்லாம் காற்றாய் மாறிவிடுகின்றன என்றார்.
நாகéசணி:
எனக்கு இந்த வருடத்தோடு 56 வயதாகின்றது. நான் இந்த ஊருக்கு திருமணம் முடித்து வந்து முப்பது வருடங்களாகின்றன. இங்கு உள்ள எல்லாரும் அரலிமர காளியம்மனின் அருட்திறச்சிறப்பை கூறுகின்றனர். நானும் அதை உணர்ந்தது மட்டுமல்ல அனுபவித்தும் இருக்கின்றேன். எனது கணவரின் அண்ணாää அவரது மனைவிää பிள்ளைகள்ää எனது கணவனின் தாய்ää தந்தை அனைவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். அப்Nhபது ஒரு நாள் எனது கணவனிள் அண்ணனது ஆயிரம் ரூபாய் பணத்தைக் காணவில்லை. அதனால் அவர்வீட்டில் உள்ள அனைவர் மீதும் சந்தேகம் கொண்டு பழிச்சொற்களால் பேசினார். பிறகு முட்டை ஒன்றில் அனைவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு சென்று அதனை அரலிமரகாளியம்மனின் கோயிலில் வைத்தார். அதாவது “எட்டு நாளைக்குள் என் பணத்தை திருடியவர்களை நீ பழிவாங்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறியது போல தண்ணீர் எடுக்க போன அவரது மனைவி கீழே விழுந்து தலை கல்லிலே அடிபட்டு இறந்த செய்தி ஊNரையே கலங்கச் செய்தது. அரலிமர காளியம்மன் எவ்வளவு நன்மையைத் தருகின்றாளோ அவ்வளவு Àரம் அநீதி நடக்கும் போதும் தண்டிப்பாள்.


முருகன்கந்தசாமி(கோயில் éசகர்)
எனது பெயர் முருகன் கந்தசாமி. எனது பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் இக்கோயிலுக்கு காலாகாலமாக éசை செய்து வருகின்றோம். இந்த அரலிமர தாயின் மகிமை இந்த ஊர் அறிந்ததே. அம்மை நோயால் சாகக் கிடந்த எனது மகனை காப்பாற்றிய என் தாயிற்கு நான் வாழ்நாள் முழுதும் சேவை செய்ய கடமைபட்டவனாக இருக்கின்றேன். இவ்ëர் மக்களின் துன்பத்தைக் கழைய வந்த தாய் இவள். இவளிடம் துன்பம் என்று வந்தவர்கள் இன்பத்துடனேயே செல்வர். இவளை நம்பியவர்களுக்கு வாழ்வில் எல்லா நாளும் வெற்றியே கிடைக்கும்.
கிருஸ்டினா:
நான் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவள். திருமணம் முடித்து எட்டு வருடமாகியும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பிறகு இவ்ëரில் உள்ள ஒரு பாட்டியின் அறிவுரையைக் கேட்டு அரலிமர காளியம்மனுக்கு காணிக்கை செலுத்தினேன். எல்லோரின் குறைகளையும் கேட்ட அந்த அம்மன் என் முறையையும் கேட்டாள். இன்று எனக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளான். அவன் அம்மனின் கருணையால் கிடைத்தவன். இந்த அரலிமர காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.
இவர்களின் பதில்கள் மூலம் அவ்ëர் மக்கள் மத்தியில் “அரலிமர காளியம்மன் ஆலயம்” பெற்றுள்ள செல்வாக்கை அறியலாம்.

எழுதியவர் : GAYATHRI - university of peradeniya (17-Aug-14, 11:25 am)
பார்வை : 425

சிறந்த கட்டுரைகள்

மேலே