கிராமத்து இயற்கை அழகு- ராகி

பச்ச பசுங் காட்டில்
மாட்டுவண்டி போகுது
புழுதி பறக்க ரோட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

ஒத்த வயக் காடு
திச்டி பொம்மை மேடு
மாமா மகள் அட பாடு
ஏனோ இயற்கை தானோ!!!

சில்லென்ற வீசுது தென்றலாய்
கும்மென மணக்குது
மண் வாசனையாய்
ஏனோ இயற்கை தானோ!!!

உச்சி வெயில் காட்டில்
உழைக்கும் வியர்வை
நெஞ்சு கூட்டில்
ஏனோ இயற்கை தானோ!!!

மீசை மொளச்ச பதினாறு வயசு வீரம்
தப்புனா அடிச்சு மஞ்சா எடுக்கும் தீரம்
ஏனோ இயற்கை தானோ!!!

கில்லி கபடி ஆட்டம்
பொண் வண்டு கூட்டம்
எப்பொழுதும் கொண்டாட்டம்
ஏனோ இயற்கை தானோ!!!

பல்லாங்குழி ஆட்டம்
ஊர் திருவிழா கூட்டம்
தெருவிலோ தேரோட்டம்
ஏனோ இயற்கை தானோ!!!

சித்தப்பன் பெரியப்பன் உறவு கோடி
பிரச்சினை என்றால் ஓடி வரும் நாடி
ஏனோ இயற்கை தானோ!!!

இந்தியாவின் இளைஞன்
வயக்காட்டில் உழுவும் கிழவன்
ஏனோ இயற்கை கிராமம் தானோ!!!

எழுதியவர் : கிருஷ்னா (17-Aug-14, 12:33 pm)
பார்வை : 2601

மேலே