ஆவல்
காலையில் பூத்த ரோஜா மலரே,
காதலை சொல்ல ஓடிவா..
கண்விழித்து உன்னை நினைத்திருந்தேன்,
காலையில் காப்பிபோட்டு தரவா..
பட்டாம்பூச்சியை போல் பறக்காதே என் மனமே,
சிறகில்லா பூ நீ மனதிற்குள்ளே இரு..
ரோஜாவை பருக ஆயிரம் வண்டுகள்,
அதை பறிக்க உரிமை பொன்வண்டு உனக்கே..
கணினி திறந்து காத்திருக்கிறேன்,
கைப்பேசியை கட்டிக்கொண்டு நான் படுக்கிறேன்,
நெஞ்சமும் நேரமும் வீணாகுது,
விருப்பம் என்று ஓர் வார்த்தை சொல்வாய.?