அவனிடம் கொஞ்சம் சொல்லுங்களேன்

நேரம் காட்டும் முள்ளே..
இந்த முல்லையின் வயதும் கடக்கிறதென...
கொஞ்சம் சொல்லேன்...!

தேய்ந்து போகும் நிலவே..
இவள் தேகமும் தினம் தேய்கிறதென அவனிடம்..
கொஞ்சம் சொல்லேன்...!

ருசித்து உண்ணும் உணவே...
இவள் எண்ணம் முழுதும் அவனேயென்று..
கொஞ்சம் சொல்லேன்...!

மணம் பரப்பும் மலரே...
இவள் மனதின் மணமும் அவனேயென்று...
கொஞ்சம் சொல்லேன்...!

தினம் வளரும் மீசையே..
இவள் ஆசைகளும் வளருதென...
கொஞ்சம் சொல்லேன்...!

வீட்டின் அறைகளே...
இவள் இதய அறைகளில் வசிப்பவன் அவனேயென்று..
கொஞ்சம் சொல்லேன்...!

ஓடித் திரியும் நாய்க் குட்டியே...
இவள் செல்லம் என்றும் அவனேயென்று..
கொஞ்சம் சொல்லேன்...!

இதமாய் வீசும் காற்றே..
இவள் காதலையும் அவன்மீது வீசிவிட்டு...
கொஞ்சம் சொல்லேன்...!

மழைத் தூவும் மேகங்களே..
இவள் நினைவுகளையும் அவன்மேல் தூவிவிட்டு..
கொஞ்சம் சொல்லேன்...!

சொல்லுங்களேன்....
நான் அவனுக்காய் பிறந்தவளென்று ..
அவன் வரவிற்காய் காத்திருக்கிறேனென்று...!!

எழுதியவர் : மணி (18-Aug-14, 9:07 pm)
பார்வை : 374

மேலே