எங்கே மனிதம்

எங்கே மனிதம்???

விபத்தில் சிக்கியவன்
உதவிக் கேட்டிலும்
விலகிச் செல்லும்
உன் சுய நலத்தால்
அவனுடன் சேர்ந்தே
மடிகிறது மனிதம்

சதைவெறி மிறுகங்களின்
சபலங்களால் போராடும்
அபலைப் பெண்ணின்
கடைசிச் சொட்டு கண்ணீரோடு
கரைகிறது மனிதம்

ஒருவனது தொழில்
ஜாதி
ஏழ்மை
இயலாமையை கொண்டு
நீ பார்க்கும் பார்வையில்
நித்தம் துடிக்கிறது
மனிதம்

துப்பாக்கி பீரங்கி
ஆகியவற்றின்
இடிமுழக்கத்தில்
அப்பாவி மனிதனின்
மரண ஓலத்துடன்
சேர்ந்து கேட்ப்பாரற்று
சாகிறது மனிதம்

நோயுற்ற வயோதிகன்
பிச்சை என்று
கேட்டிலும் தராமல்
துரித உணவகத்தில்
பணிபுரிபவணுக்கு
நீ கொடுக்கும்
டிப்ஸுடன் விலைப்
போகிறது மனிதம்

நிலவில்
நீர்த்தேடும் மனிதா
கொஞ்சம்
நிஜத்தினில் மனிதம்
தேட முயற்சிப்பாயா????

எழுதியவர் : ராம் (20-Aug-14, 8:53 am)
சேர்த்தது : ராம்குமார்
Tanglish : engae manitham
பார்வை : 276

மேலே