கருணை காட்டு எம் இறைவா

அழுத கண்ணீர் துடைப்பதற்கு
ஆரத் தழுவித் தேற்றுதற்கு!
அவணியிலே யாருமில்லை!
ஆதரவும் எங்குமில்லை!!

சீர் திருத்தம் பேசுதற்கும்!
சங்கம் அமைப்பதற்கும்!
சிறிதளவும் குறைவில்லை!
எம் குறை தீரவில்லை!

கல்வி சிறப்பென்பார்!
களவு சிறுமை என்பார்!
கற்றிட உதவவில்லை - அவர்
களவை விட்டிட முனையவில்லை!!

ஏழை எங்கள் உரிமையினை
எடுத்துச் சொல்லும் வாய்ப்பதனை!
என்றும் எமக்குத் தரவில்லை!
எழுந்து நிற்க விடவில்லை!

ஒரு சாண் வயிற்றுக்காய்!
பகலிரவாய் சோற்றுக்காய்!
ஓடியோடி உழைத்திடினும்!
எம் வயிறு நிரம்பவில்லை!

கால்நடைகள் போல நாமும்
கால் நடையாய் செல்லுகிறோம்!
தெருவோரம் வாழுகிறோம்!
பனி மழையில் வீழுகிறோம்!!

இறுதிவரை எம் வாழ்க்கை
இப்படியே சென்றிடுமோ?
ஏங்கியே தவிக்கின்றோம்!
கருணை காட்டு எம் இறைவா!!!!

எழுதியவர் : ஜவ்ஹர் (20-Aug-14, 7:00 am)
பார்வை : 261

மேலே