தகவல் ஒன்று-------------நிஷா
மொட்டு விட்ட முல்லை மலர்
மெட்டு போட்டு சிரிக்குதம்மா-இங்கு
முத்து முத்தாய் மழைத்துளிகள்
மூக்குத்தியாய் மின்னுதம்மா....
வட்டமிடும் வண்டுக்கூட்டம்
விசும்பி நோக்கி பறக்குதம்மா....
வாழைமர இலைகள் எல்லாம்
தாளம் போட்டு ஆடுதம்மா....
எட்டி நிற்கும் தென்னைமரம்
ஒட்டி உரச பார்க்குதம்மா....
ஏழையிவள் குடிசையெல்லாம்
ஓலை விரிந்து சிதறுதம்மா....
மண்ணை தொட்ட மழைத்துளிகள்
வெள்ளமென பெருகுதம்மா. ...
விட்டு விட்டு அடித்த காற்று
வேட்கை கொண்டு வீசுதம்மா. ....
குட்டி குட்டி செடிகள் எல்லாம்
குழையும் மலரோடு சரியுதம்மா....
இறுமாப்பு கொண்டிருந்த ஆலமரம்
சிரம்தாழ்ந்து பணிந்திட போகுதம்மா..
பட்டி தொட்டி மக்களெல்லாம்
பாதுகாப்பு வேண்டுதம்மா....
நல்ல வழி அரசை கேட்டு
நம்பி தகவல் போகுதம்மா.....
விசும்பி-வானம், குழையும்-வாடும்,