சிவந்த தெரு

ஒருநாள் யாருமற்ற ஓரிடத்தில்
ஒரு சிறுமி நின்றிருந்தாள்
தந்தன் யாரென்று தெரியாது
தாயையும் கண்டிருக்கவில்லை
அவ்வழியே வந்த ஒரு ஆள்
அப்பிஞ்சு கைப்பிடித்து
ஒரு தெருவிற்குள் அழைத்துச்சென்றான்
அன்றிலிருந்து அத்தெருவின் பெயர்
"சிவந்த தெரு"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (21-Aug-14, 2:51 pm)
Tanglish : sivantha theru
பார்வை : 90

மேலே