வேண்டுகோள்

புதுமையை வரவேற்க வேண்டும்
பழமையை வழியனுப்ப வேண்டாம்

பழயதை அளிக்கபோகி வேண்டும்
பழயதை அழிக்கபோகி வேண்டாம்

விண்ணும் வியக்க கவிஓத வேண்டும்
விண்ணை பிளக்க புகைஊத வேண்டாம்

இயற்கை அளித்த செயற்கை வேண்டும்
இயற்கையை அழிக்க செயற்கை வேண்டாம்

கண்கள் நேர்பட பேச வேண்டும்
கண்களில் துளியும் கசிவு வேண்டாம்

இன்னும் இன்னும் சிந்தனை வேண்டும்
இன்னல் தரும் இரைச்சல் வேண்டாம்

எண்ணம் யாவும் சீர்பட வேண்டும்
என்னஇது என்ற எண்ணம் வேண்டாம்

தன்னடக்கம் என்றும் தழைத்திட வேண்டும்
தற்பெருமை ஒன்று முளைவிட வேண்டாம்

இளமையில் வருத்தம் இன்மை வேண்டும்
முதுமையை வருத்தும் தொன்மை வேண்டாம்

வரிகளுக்கு எப்போதும் இசைதுணை வேண்டும்
வார்த்தைக்கு ஒருபோதும் மௌனம்துணை வேண்டாம்

வானத்திற்கு நில வொன்று வேண்டும்
வாழ்க்கைக்கு இரு ளொன்று வேண்டாம்

உலகு மொழிகளை கற்றுதெளிய வேண்டும்
அழகிய தமிழை அகற்றிட வேண்டாம்

பாசம் காட்டி வாழ வேண்டும்
பாசாங்கு காட்டி வாழ வேண்டாம்

பகைத்த உறவினும் பரிவுகொள்ள வேண்டும்
அனைத்த உறவினில் முறிவுகொள்ள வேண்டாம்

சிறிதொரு வாழ்வினில் சிறகடிக்க வேண்டும்
சிற்றின்ப வலைகளில் சிறைபட வேண்டாம்

புன்னகை தெறிக்கும் பூவிதழ் வேண்டும்
பூவிதழ் கருக்கும் புகைபந்தம் வேண்டாம்

குழப்பம் இல்லா மனமொன்று வேண்டும்
குடலெரிக்கும் குடுவையில் குடிலொன்று வேண்டாம்

கனவோடு வரும் துயிலொன்று வேண்டும்
கவலையின்றி வாழும் துறவொன்று வேண்டாம்

அன்புத்தாய் மடி தலையணையாய் வேண்டும்
அதற்குமேல் சுகமென்ன சொர்கமும் வேண்டாம்

வேசமிட்ட சாதிமதத்தை வெந்தழலில் எரியவிட்டு
நேசமென்ற போர்வைக்குள் தேசம் புகுந்துகொண்டு
கதகதப்பு காண வேண்டும்

..................................................................................................
சரவணா

எழுதியவர் : சரவணா (21-Aug-14, 1:14 pm)
Tanglish : ventukol
பார்வை : 281

மேலே