அசைவமே அசைவாயோ என் கருத்துக்கு இசைவாயோ

உன்னை உண்ணும்
மிருகம் மனிதனா ?
மிருகம் மனிதனை கொன்றால்
உலகம் சும்மா விடுமா ?

உனது உயிர் பெரிதா ?
உயர்வான உயிரென்று ஏது?
உயிர்களில் பிரிவேது

புல்லைத் தின்று வளரும் மான்கள்
மானைத் தின்று உடல் வளர்க்கும் புலிகள்
இரண்டும் தின்னும் நாய்கள்
இதில் எங்கு வருகிறான் மனிதன்

உடலை வளர்க்க ஊண் உண்ணுகிறாய்
மிருகம் அதுபோல் வளர்க்க நினைத்தால்
மனித உயிர் மிஞ்சுமா ?

எதுவும் எதிர்க்க துணிவற்ற தென்று
திமிராய் அழிப்பதா ?அதுபோல்
உனக்கொரு நிலை வந்தால்
என்ன எண்ணும் உன்மனதில் ...!

எழுதியவர் : கனகரத்தினம் (21-Aug-14, 7:49 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே