கண்ணீரில் நீந்தும் தண்ணீர்
தமிழா.. தமிழா..
மழை
இல்லையென்று
கவலைப்படாதே
கண்ணீர் இருக்கிறது ....!
உதடுகள்
நனைய வரும்
உன் கண்ணீர் அணைகள்
தொட்டு விடும் தூரம் தானே ...?
நாக்கை நீட்டு
மூக்குக்கு மேல்
காணலாம்
கண்ணீர் அணைக்கட்டுக்களை ...!
தப்பித்தவறி
கர்நாடகா பக்கம்
நாக்கை
நீட்டி விடாதே
காவேரித்தாயின்
குரல் வலையை
கைகளாலேயே
அணை கட்டி விடுவார்கள் ...!
மூக்கை சொரிய
கைகளை தூக்க
உனக்கேது நேரம் ....!
நீ
கைகளை
நீட்டுவது
நோட்டு வாங்கவும்
ஒட்டுப்போடவும் தானே ...!
தமிழகத்தின்
தன் மானம் தானே
தண்ணீரில்லா
நிலமாய் வறண்டே கிடக்கிறது ..!
நீதிமன்ற தீர்ப்புகளும்
கால் கடுக்க
அங்கே காத்தே நிற்க்கின்றன ......!
தமிழா ..இனி
தண்ணீருக்காக
கண்ணீர் விடாதே ...!
வீட்டுக்கு வீடு
மழை நீர் தொட்டி அமை
தினம் தினம் மரம் வளர் ....!
ஓர் நாள்
மேகத்தின்
கதவுகள் திறக்கும்...!
காவிரியும்
அணை வேலி தாண்டி
குதித்தோடி வந்து
பச்சைத்தாவணியால்
நிலமகளை தழுவி மகிழ்வாள் ....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
