தூக்கம்

துயர் நீக்கும் நல்நேரம் !
துன்பம் போக்கும் இன்பநேரம் !
கவலைகள் விலகும் கனிவான நேரம் !-அவை
நம் இனிமையான நேரம் !

இன்பங்கள் சேர்ந்து
துன்பங்கள் நீங்கும் -நாம்
விரும்பும் நேரம் !

எளியோருக்கும் இளையோருக்கும்
உயர்ந்தோருக்கும் உழைத்தோருக்கும்
இணையான நேரம்!

இலவசமாய் வரும் நேரம்!
இன்பத்தை அள்ளித் தரும்
ஆறுதலான நேரம் !

அன்பு, அறிவு, ஆசை,பிரயாசை
அனைத்தையும் மறக்க வைத்து- நம்மை
அமைதி படுத்தும் நல்நேரம்!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும்
அன்பளிப்பான நேரம்!-அந்த
அருமையான நேரம்!

இறைவன் ஈவாகத் தந்த
இனிமையான -நம்
தூக்க நேரம் !

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (21-Aug-14, 8:59 pm)
சேர்த்தது : PJANSIRANI
Tanglish : thookam
பார்வை : 99

மேலே