அரிதாரம்

அரிதாரம்

அக்கா என்றழைத்தவன்
அங்கே வரவா என்கிறான் ..

தங்கை என்றழைத்தவன்
தங்க வரவா என்கிறான் ..

நெருங்கியநட்பு என்றுரைத்தவன்
நெருங்கி வரவா என்கிறான் ..

விரும்புகிறேன் என்றவனோ
விரும்பியபடி பேசவா என்கிறான் ..

இது எல்லாம் நடப்பது
முகமறியா அரட்டை களத்திலே ..

உறவு முறையின் மதிப்பு
தெரியாது பயன்படுத்துவது ஏன் ?

பெண் என தெரிந்துவிட்டால்
கவருவதற்கே முயற்சி..

சிக்கிவிட்டால் சிந்தனை தொலைத்து
சிதைந்து போகவழி சுலபம் ..

விழிப்புடன் இருந்தாலோ நீபெரிய
இவளா என்ற ஏளனம் ..

தன் குடும்ப பெண்களெல்லாம்
தங்கமாம் பாதுகாப்பாம் ..

பிற குடும்ப பெண்களும்
தங்கம்தானாம் களவாட ..

பெண்பார்க்க வருபவன் கேட்கிறான்
முகநூல் கணக்கு இருக்கிறதா?

ஆமாம் என்று சொல்லிவிட்டால்
இவள் எனக்கு வேண்டாம்..

ஏனடா! களவாட நினைப்பதும்
துடிப்பதும் பறப்பதும் நீ?

களங்கம் மட்டும் எப்போதும்
பெண்களுக்கே தருகிறாயே..!

அரிதாரம் பூசி நீ மறக்கலாம்
எப்போதும் முடியாது...

- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (21-Aug-14, 8:08 pm)
Tanglish : aritharam
பார்வை : 317

மேலே