பொன் எழுத்து

கருவினில் உருவாகி
சின்னஞ்ச் சிறு மலராகி
எழுத்து எனும் இதழ்களால்
இணைந்திடும் வரிகளாகி
இதயத்தை வருடவரும்
இங்கிதமாம் கவிதைகள்

சபைகளிலும் பேசவரும்
அவை அடக்கம் தெரிந்து வரும்
அசத்தல் எனப் பெயர் வாங்கும்
அற்புதமும் அதற்கு உண்டு
மனதில் வரும் அழுத்தமெல்லாம்
மறையத்தரும்
மனப்பாரம் அகன்று விடும்
சோதனையில் சாதனையில்
எடுத்துரைக்கும் நன்மைதனை

கருத்தினிலே கற்றது உண்டு பட்டதுண்டு
கரைந்து வரும் அனுபவங்கள்
போற்றவரும் புகழவரும்
பொன் எழுத்து பொதிந்து வரும்
புலவன் என்றும் கலைஞன் என்றும்
பெயர் கொள்ள காரணமே
கனிவான நயமான கவிதைகளே

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Aug-14, 7:03 pm)
Tanglish : pon eluthu
பார்வை : 86

மேலே